ஹிந்து ஒற்றுமை பேரணி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஹிந்துக்களின் கோயிலான லக்ஷ்மி நாராயண் கோயில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் ஹிந்துக்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஹிந்து ஒற்றுமை ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பிரிஸ்பேனில் உள்ள ஹிந்துக்கள் ஒன்றிணைந்து லக்ஷ்மி நாராயண் கோயிலுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கினர். கடந்த 26ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய ஹிந்துக்களின் நல்லிணக்க பேரணியில், ஆந்திரா, பீகார், டெல்லி, பிஜி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய ஹிந்துக்களுக்கு வணக்கம்” என்று ஆஸ்திரேலிய ஹிந்து ஊடகம் தெரிவித்துள்ளது. பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் பாரம்பரிய ஹிந்து உடைகளை அணிந்திருந்தனர். கட்டுகோப்பாகவும் அமைதியாகவும் அதேசமயம், ஒருமைப்பாடு மற்றும் வலிமையை உணத்தும் வகையில் அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த மாத தொடக்கத்தில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் குழுவால் லக்ஷ்மி நாராயண் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் கோயிலை சேதப்படுத்தி, கோயில் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், ஆஸ்திரேலிய சட்ட அமலாக்க அமைப்புகள் இதில் பெரிய அளவில் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஹிந்து கோயில்கள் மீது காலிஸ்தானி பிரிவினைவாதிகள் அடுத்தடுத்து  பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாரத மூவர்ணக் கொடியை ஏந்திய பாரத ஆஸ்திரேலியர்கள், ஹிந்துக்கள் மீது காலிஸ்தானி பிரிவினைவாதிகள், வாள்களால் கம்புகளால் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பல செய்திகள் வெளிவந்தன. பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடனான உரையாடலின் போது இந்த பிரச்சினையை அடிக்கோடிட்டுக் காட்டினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள பாரதத் துணை தூதரகமும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.