ஹிந்துவே, மதமாற்றிப் பட்டாளம், உஷார்!

அன்புடையீர் வணக்கம்.

ஒருநாள் சேலத்தில் சங்க கார்யாலயத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தேன். மாலை நேரம். அருகில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் என்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் பெயரைக் கேட்டபோது அவன் ஒரு கிறிஸ்தவன் என்று தெரிந்து கொண்டேன். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அடுத்து என்ன படிப்பதாக இருக்கிறாய்?” என்று கேட்டேன்.  அவன் பதில் வித்தியாசமாக இருந்தது. நான் பாதிரியாருக்கான படிப்பு படிக்கப் போகிறேன் என்றான். 18 வயதே ஆன ஒரு மாணவனுக்கு உள்ளத்தில் பாதிரியாராக போகவேண்டும் என்ற உணர்வு உருவாக்கப்பட்டிருந்தது. அது சரி… இதற்கு உன் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்டதற்கு தனது பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் முடிவெடுத்ததாகக் கூறினான். அதுமட்டுமல்ல, பாதிரியாருக்கான படிப்பு முடிந்த பிறகு உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்து ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தி பெற்றோர்களே வழியனுப்பும் விழா நடத்துவார்கள் என்றும் அந்த மாணவன் தெரிவித்தான்.

கிறிஸ்தவப் பள்ளிகளில் பைபிள் வகுப்பு நடத்தப்படுகிறது. இதுபோன்ற மூளைச் சலவையும் செய்யப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என ஏராளமான பாதிரிகளும் கன்னியாஸ்திரிகளும் பயிற்சி பெற்று மதமாற்ற வேலைகளில் தீவிரமாக இறங்குகிறார்கள். இது ஆபத்தான போக்கு. ஹிந்துக்கள் விழிப்புணர்வுடன் நமது தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பாதுகாப்பதில் தீவிரம் காட்ட முன்வரவேண்டும்.

உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு இதுபோன்ற செய்திகள் சென்றடைய அவர்களையும் விஜயபாரதம் வாங்கச் சொல்லுங்கள்.

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்