ஹிந்துக்களின் பண்டிகையை கொச்சைப்படுத்துவது ஏன்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி இணையம் வழியாக அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்கள், சீரியல் பார்ப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதை போன்றதொரு ஓ.டி.டி தளமான  ‘ஈராஸ் நவ்’ ஹிந்துக்கள் பெண்களை தெய்வமாக போற்றி வழிபடும் நவராத்திரியை கொச்சைப்படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டுள்ளது.

இதற்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், காத்ரினா கைப், ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுடன். அவர்கள் நடித்த படங்களின் ஆபாச வசனங்கள் இந்த இழிசெயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என ‘அரே’ எனும் ஓ.டி.டி தளமும் சில கீழ்தரமான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இவற்றின் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஓ.டி.டி தளங்களை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இதை போன்ற நிறுவனங்களை தடை செய்யவும் வேண்டும்.
இதை போல அவர்கள் கிறிஸ்தவ முஸ்லிம் விழாக்களை கொச்சைப்படுத்த துணிவார்களா? ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் ஏன் காயப்படுத்துகின்றனர்? இவர்கள் இப்படி செய்ய யார் காரணம்? இதை தடுக்க ஹிந்துக்கள் என்ன செய்யலாம் என சில கேள்விகள் மனதில் எழவே செய்கின்றன.

ஹிந்துக்களின் ஒற்றுமையே இவை அனைத்தையும் தடுக்கும் பிரம்மாஸ்திரமாக கண்ணுக்கு புலப்படுகிறது. இதனை தவிர, மத துவேஷக்காரர்களை சட்டப்படி எதிர்கொள்வது, அந்த நிறுவனங்களின் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பது, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் கட்சிகளையும் அமைப்புகளையும் புறக்கணிப்பது, ஹிந்து ஆதரவாளர்களுக்கு ஆதரவளிப்பது போன்றவை இது போன்ற அவல நிலை நிச்சயம் ஒரு அதற்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்.