ஸ்ரீநகரில் தாமரை மலராமல் போக விடுவேனா என்கிறார் ஹீனா!

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு மூன்று லட்சம் தீவிர உறுப்பினர்கள் இருப்பதாக, கூறும் ஹீனா பட், இன்று லால் சௌக்கில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பறக்கிறது, நாங்கள் பேரணிகள் நடத்தும்போது கட்சியின் கொடியை ஏற்றுகிறோம்”. காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணிவுமிக்க தலைவர் ஹீனா. 2015ல் ஸ்ரீநகரில் இருந்து சட்டமன்றத் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.

ஸ்ரீநகரில் பாஜக 14 வேட்பாளர்களை களம் இறக்கியது. ஹீனா சொல்கிறார், “எங்கள் தோல்வியிலும் ஒரு வெற்றி மறைந்திருந்தது, ஏனெனில் இங்கு ஆட்சியில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீநகரில் 14 வேட்பாளர்களை நிறுத்தியதில்லை”.

ஹீனாவின் தந்தை மொஹம்மத் ஷஃபி பட், சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஆனால் அவர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்.

ஹீனா ஏன் பாரதிய ஜனதாவில் இணைந்தார்? அரசியலில் ஈடுபட தனது தந்தைதான் ஊக்கமளித்தார் என்றாலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியவாத சித்தாந்தங்களே தன்னை அந்தக் கட்சியில் இணையத் தூண்டியது என்கிறார் ஹீனா.

ஆனால் இப்படி முடிவெஎடுப்பது சுலபமானதாக இல்லை. ஒரு பெண் அரசியலில் நுழைவது ஒரு பிரச்சனை என்றால், பள்ளத்தாக்குப் பகுதியில் விரும்பத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில் சேர்வது பல கேள்விகளை எழுப்பியது”.

எது எப்படியிருந்தாலும், தான் இந்த பிரச்சனையை சுலபமாக எதிர்கொண்டு வெற்றிபெற்றதாக ஹீனா கூறுகிறார்.