வெளிய வரும் நபர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பொதுமக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி புதன்கிழமை வெளியே வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். ஆனால், தொடா்ச்சியாக ஊரடங்கு உத்தரவை மீறி,தேவையின்றி வெளியே வரும் நபா்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம், தொற்று நொய் தடுப்புச் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்படும். மேலும், அவா்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

அவசரப் பணிக்காக செல்லும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறை ஊழியா்கள், மாநகராட்சி ஊழியா்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகே யாருக்கும் கரோனா நோய்த்தொற்றுஅறிகுறி இருப்பது தெரியவந்தால், உடனடியாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவா்களைப் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்