வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் திருத்த மசோதா

மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டும், தேச ஒற்றுமையை மையப்படுத்தியும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. பாரதத்தில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அந்நிய நாட்டிலிருந்து வரும் நிதியிலிருந்து, மதமாற்ற நடவடிக்கைகளுக்கும், அர்பன் நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் வாங்கவும் மேற்படி நிதி பயன்படுகிறது.
ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்கள் மூலம், 2014 முதல் 2017 வரை 18,000 மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் முறையான கணக்குகளை உரிய காலங்களில் தாக்கல் செய்யாத காரணத்தால், தங்களது உரிமங்களை இழந்தன. 2018 முதல் 2022 வரை 2,000 நிறுவனங்களின் FCRA பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. அரசு சாரா நிறுவனங்களுக்கு வரும் நிதியை கடுமையான சட்ட நடவடிக்கை மூலம் கண்காணிப்பும் நடைபெறுகிறது. ஆனாலும், பல அந்நிய நாடுகள் பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த, அர்பன் நக்சல்கள், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பகள் மற்றும் மத மாற்றங்கள் ஏற்படுத்தும் கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு அதிக அளவில் நிதி வருகிறது.
இதனால் ரத்து செய்யப்பட்ட அல்லது புதுப்பிக்கப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களால், வெளிநாட்டு நிதியிலிருந்து உருவாக்கப்பட்ட சொத்துக்களைக் கையகப்படுத்தவும், நிர்வகிக்கவும், அப்புறப்படுத்தவும் அதிகாரம் பெற்ற ஒரு சக்தி வாய்ந்த ‘நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை’ உருவாக்க இந்த மசோதா முன்மொழிகிறது. வெளிநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் சொத்துக்களை உரிமையாக்குதல், நிர்வகித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்கென ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை அறிமுகப்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும். நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர், அத்தகைய சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றிருப்பார் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்ட திருத்தம் எவ்வளவு முக்கியமானது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்கிறார்கள்.
மதமாற்றம் பாரத தேசத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீர்குழைக்கும் வகையில் மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. மதமாற்றத்திற்கு அந்நிய நிதி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்தான், மதமாற்றம் நடைபெறுவதாக கருதக்கூடாது. ஐம்பதாண்டு காலம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த காங்கிரஸ் அரசுகள் முன் வரவில்லை. 1956-ல் மத்திய பிரதேசத்தில் மலைவாழ் மக்களை மத மாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகளால் ஆபத்து ஏற்படுகிறதா? என்பதை விசாரிக்க காங்கிரஸ் ஆண்ட மத்திய பிரதேசத்தில் நியோகி ஆணையம் அமைக்கப்பட்டது. மேற்படி ஆணையம் தனது விசாரணை அறிக்கையில், பாரதத்திற்கு பொருத்தமில்லாத அல்லது மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் செயல்படும் வெளிநாட்டு மிஷனரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், வெளிநாட்டு மிஷனரிகளின் நிதி வரத்து மற்றும் அவர்களின் சமூகப் பணிகளை அரசு கண்காணிக்க வேண்டும் கிறிஸ்தவ தேவாலயங்கள் வெளிநாட்டு நிதியையோ அல்லது வெளிநாட்டு அதிகாரத்தையோ சார்ந்திருக்காமல், முழுமையாக பாரதியர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்து இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி, 1982-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு சம்பவத்திற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் வேணுகோபல் கமிஷனும் வலியுறுத்தியுள்ளது. பாரதத்தில் உள்ள கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு அந்நிய நாட்டு நிதியானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி (World Vision, Compassion International) போன்ற பெரிய சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள் பாரத கிளைகளுக்கு நிதி வழங்குகின்றன. 2011 முதல் 2021 வரையிலான தரவுகளின்படி, மத ரீதியிலான அமைப்புகளுக்கு வந்த நிதியில் கிறிஸ்துவ அமைப்புகள் முதலிடத்தில் இருந்தன. குறிப்பாக, ( World Vision India, Gospel for Asia ) போன்ற அமைப்புகள் ஆயிரக்கணக்கான கோடிகளைப் பெற்று வந்தன. அரசாங்க தரவுகளின் படி, 2022- − 2023-ல் மட்டும் பாரதத்திற்குள் வந்த அந்நிய நாட்டு நிதி ரூ. 22,000 கோடிக்கு மேல் .
பாரதத்திற்குள் வரும் ஒட்டு மொத்த வெளிநாட்டு நிதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. Gospel for Asia (GfA) உலகிலேயே பெரிய மிஷனரி நிதி வழங்கும் அமைப்புகளில் ஒன்று. பாரதத்தில் Believers Church மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது. ‘World Vision India’ அமைப்புக்கு நிதி வழங்கும் முக்கிய நிறுவனம் ஆகும்.
மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகள் வழங்கும் நிதியானது, எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறதோ அதற்கு செலவிடுவதை விட, வறுமையில் வாடும், தலித்துக்கள் மற்றும் மலைவாழ் மக்களை மத மாற்றம் செய்வதற்காகவே பெரும் தொகை செலவிடப்படுகிறது. இதை தடுப்பதற்காகவே வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் திருத்த மசோதா கொண்டு
வரப்பட்டுள்ளது.