வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா பரிந்துரை – காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு, கட்சியினர் ஆதரவு

அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கத்திற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது சாவர்க்கர் விஷயத்திலும் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மத்திய அரசு வீர சாவர்க்கர்-க்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது, ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி ஆதரவாக கருத்து தெரிவித்தார். சாவர்க்கரின் தியாகத்தை புறந்தள்ள முடியாது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திர போராட்டத்திற்கும் தலித் மக்களின் உரிமைக்காகவும் சாவர்க்கர் தொடர்ந்து போராடினார். நாட்டிற்காக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததை யாராலும் மறக்க முடியாது என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சாவர்க்கர்-க்கு பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இரண்டே நாட்களில் இவர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீர சாவர்க்கருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சாவர்க்கருக்கு தபால் தலை வெளியிட்டுள்ளார். ஆனால், சாவர்க்கர் கடைபிடித்த ஹிந்துத்துவ கொள்கைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றார்.

மன்மோகன்சிங் கருத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அணில் சாஸ்திரியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி சாவர்க்கருக்கு சரியான காரணம் இல்லாமல் தபால் தலை வெளியிட்டிருக்கமாட்டார் என்று தெரிவித்தார். இப்படி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்பாடான கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறை இல்லை. அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கப்பட்ட போதும் காங்கிரஸ் கட்சி இதை எதிர்த்தது. ஆனால் அதன் முக்கிய தலைவர்கள் சிலர் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது சரியானது தான் என்று ஆதரவு தெரிவித்தார்கள்.