சிவகாசியில் களைகட்டிய பட்டாசு விற்பனை – 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி

தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கு வதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் 27-ம் தேதி தீபாவளி கொண்டாடப் படுவதையொட்டி விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரப் பகுதிகளிலும் பைபாஸ் சாலைகளையொட்டியும் 1,500-க் கும் மேற்பட்ட பட்டாசு மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் சார்பில் பல இடங்களில் அதன் விற்பனை கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காக 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலை யில் பட்டாசுகளை விற்பனை செய் கின்றன. இதனால் பட்டாசு பிரி யர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் பட்டாசு அனுப்பும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அதற்குள் வெளியூர்களுக்கு பட்டாசுகளை கொண்டு சேர்க்க முடியாது என்பதால் புதிய புக்கிங் செய்வதை சில சரக்கு லாரி நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

வெளியூர்களில் இருந்து சிவ காசி வருவோரை அணுகும் பட்டா சுக் கடை ஏஜென்ட்கள், 40 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்கின்றனர். இத னால், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டாசுக் கடைக ளில் தற்போது அதிகமான கூட்டம் காணப்படுகிறது.

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘சிவகாசியில் பட்டாசு விற்பனை கடந்த 4 நாட்களாக அதிகரித்துள்ளது. வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சொந்த வாகனங்க ளில் வந்து பட்டாசு வாங்கிச் செல்கிறார்கள். அதே நேரம், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் சற்று குறைவுதான்’’ என்று கூறினர்.