விவசாயிகளை வஞ்சிக்கும் மம்தா

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை மம்தாவின் மேற்குவங்க அரசு அமல் படுத்த மறுத்ததன் விளைவாக, மாநிலத்தில் 70 லட்சம் விவசாயிகள் பயன்பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது.

மேற்குவங்க அரசின் மோதல் நிலைப்பாடு காரணமாக மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய 8,400 கோடி நிதியுதவி தடுக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்டமுறையில் ரூபாய் 12,000 நேரடியாக பயன்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது என்று மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் குற்றம் சாட்டியுள்ளார்.