விடிவுக்காக ஏங்கும் முஸ்லிம்கள்

மசூதிகளை இடித்து அங்கு கழிப்பிடம் கட்டுவது, சித்ரவதை முகாம்களில் அடைப்பது, குழந்தைகளை குடும்பத்திலிருந்து பிரிப்பது என சீனா உய்குர் முஸ்லிம்களை நடத்தும் முறைகள் கொடுமையானவை. உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் எல்லாம் இது குறித்து எவ்வளவு எடுத்து கூறினாலும் சீனா அவற்றை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் தற்போது அங்கு உள்ள முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை அன்று பன்றிக்கறி உண்ண சீன அரசு கட்டாயப்படுத்துகிறது. மறுப்போருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இது குறித்து சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானும் வாய் திறப்பதில்லை. அமெரிக்க அரசு தற்போது சீனா, பாகிஸ்தான், வடகொரியா, சௌதி அரேபியா, தஜகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளின் மதசுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.