வார ராசிபலன் – விகாரி வருடம், தை 26 முதல் மாசி 03 வரை( பிப்ரவரி 09 – 15) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: உற்சாகத்துடன் பணிபுரியும் உங்களுக்கு ஊதியமும், உயர் பதவியும் கிடைக்கும். வாகனங்களும் அமையும். சிலர் சிக்கலான பணிகளையும் சிறப்பாகச் செய்து புகழ் பெறுவார்கள். பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும்.

பெண்மணிகள்: கலைகளில் பயிற்சி பெறுவீர்கள். ஆடை அணிகலன் ஆகியவை கிடைக்கும். வாசனை திரவியங்கள், விருப்ப உணவுகள் ஆகியவற்றை பெற்று மகிழ்வீர்கள். வீடு, மனை வாங்கி பதிவு செய்யலாம்.

மாணவ மணிகள்: கலைகளில் பரிசு கிடைக்கும். சுற்றுலா வேடிக்கை விநோதங்களில் ஈடுபடுவீர்கள். சொல் வன்மையால் பாராட்டு கிடைக்கும். மதிப்பெண் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சமூக அந்தஸ்து உயரும்.

அரசியல்வாதிகள்: வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சாதனை புரிந்து புகழடைவீர்கள்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: நேர்மைக்காகவும் கடின உழைப்பிற்காகவும் பாராட்டப் பெறுவீர்கள். செயல்திறன் கூடும். உதவியாளர்கள் வருகையால், பணி பளு குறையும். நவீன வசதிகளையும் பெறுவீர்கள். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.

பெண்மணிகள்: ஆடை, ஆபரணம் சேரும். சிலர் வெளிநாடு, வெளியூர் செல்லலாம். பால்ய தோழிகளையும், ஆசிரியர்களையும் சந்திப்பீர்கள். சேமிப்பு உயரும். கடன் தருவதை, பெறுவதை தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆசிரியர் அல்லது ஆன்மிக குருவால் நல்ல வழி கிடைக்கும். உயர்க்கல்விக்கான தடைகள் நீங்கி, எண்ணங்கள் நிறைவேறும்.

சிறுதொழில், வியாபாரம்: ஊழியர்கள் கிடைத்து உறுதுணையாக இருப்பார்கள். போட்டியாளர்கள் விலகுவார்கள். பங்குதாரர்கள் சமாதானம் பெறுவார்கள். தெய்வீக வழிபாட்டில் மனநிறைவு பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள்: பயணங்களால் பயன் உண்டு. தலைமையின் கவனம் உங்களுக்கு சாதகம் செய்யும். உயர் பதவியும் கிடைக்கும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: உங்களிடம் உதவி பெற்றவர்கள் இப்போது உதாசீனம் செய்வார்கள். அலைச்சல் அதிகரிக்கும். சோர்வுகளைத் தவிர்த்து, கடின உழைப்பை தர வேண்டும். உறுதியான மனநிலையை கைக்கொள்ள முயலவும்.

பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் இணக்கமாக இருக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் வெளி உணவுகளை தவிர்க்கவும். பொருள் இழப்பு ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.

மாணவ மணிகள்: கல்வியில் நாட்டம் தேவை. சோம்பலைத் தவிர்த்து உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். அலைச்சலை தவிர்க்கவும். எதிர் பாலினரிடத்தில் நெருக்கம் வேண்டாம்.

சிறுதொழில், வியாபாரம்: வெளிநாட்டுப் பயணத்தால் அலைச்சல் ஏற்படலாம். அரசு ஆதரவு தற்சயம் கிடைக்காது. வரி கணக்குகளில் கவனத்துடன் செயல்படுவும்.

அரசியல்வாதிகள்: தலைமையிடம் சச்சரவு தவிர்க்கவும். சக நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் ஆதரவு அதிகரிக்கும். அந்தஸ்தும் புகழும் ஓங்கும். கடன்கள் தீரும். பதவி உயர்வும் கிடைக்கும். சிலர் வேறு நிறுவனங்களில் வேலையில் சேரலாம். பொழுது போக்கு உபகரணங்கள் வாங்குவீர்கள்.

பெண்மணிகள்: புதிய வாகனங்களில் பயணிப்பீர்கள். இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். செய்கின்ற முயற்சி நற்பலன் தரும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தன, தான்யங்கள் சேரும்.

மாணவ மணிகள்: கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். புதிய துறை பற்றி விவரங்கள் பெறுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பரிசு கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். தொழிலாளர்கள் கடும் உழைப்பை தருவார்கள். கிளைகள் துவக்குவீர்கள். தனலாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: வருமானம் வந்தாலும் தலைமையின் கண்டிப்புக்கு ஆளாகலாம். வழக்குகளில் பிரச்சினை உருவாகலாம்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: பணியிடத்தில் பதட்டம் நிலவும். சக ஊழியர்களின் உதவியுடன் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். அந்தஸ்து உயரும். சிலருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பெண்மணிகள்: பெண்களுக்கு திருமணம் நிச்சயதாம்பூலம் நடைபெறும். தாய்மைப்பேறு விரும்பியவர்க்கு குழந்தை பிறக்கும். குழப்பமான மனநிலையை தவிர்க்க வேண்டும். வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள்.

மாணவ மணிகள்: விரும்பிய வசதிகள் அமையும். ஊக்கத்தொகை, உதவித்தொகை கிடைக்கும். எதிர்கால திட்டத்திற்கு ஆசிரியர் உதவி செய்வார். நண்பர்கள் வழியே நல்ல  செய்தி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: வாகனங்கள் வாங்குவீர்கள். கடினமான முயற்சிகள் எளிதில் கை கூடும். மரியாதை அந்தஸ்து உயரும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவுடன் சில வேலைகளைச் செய்து பெருமை அடைவீர்கள். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: நண்பர்களாக இருப்பவர்கள் விலகிச் செல்வார்கள். பலரின் குணாதிசியங்களை புரிந்து கொள்ளலாம். தைரியத்துடன் எதிர்கொண்டு, சாமர்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும். பணிகளில் கவனம் தேவை. மரியாதை ஓங்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தினர் மத்தியில் அமைதியுடன் பேச முயற்சி செய்யவும். மதிப்பு, மரியாதை உயரும். இளம் பெண்கள் எதிர்பாலினரிடத்தில் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

மாணவ மணிகள்: வாகன விபத்துகள் தவிர்க்க வேண்டும். போட்டி, பந்தயங்களில் பங்கேற்க வேண்டாம். உடல் நலனிலும் அக்கறை கொள்ளவும். மனதை அடக்கி, வெளிவிவகாரங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: வளர்ச்சி குறித்த திட்டங்களை சற்று தள்ளிப்போடவும். தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தவும். பணமுடையை தவிர்க்க நிலுவைத்தொகைகளை வசூலிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்: குழப்பமான மனநிலையில் தீவிரமான அரசியல் ஈடுபாட்டை தவிர்க்கவும். செலவுகளை குறைக்கவும். ஆரோக்கியம் பேணவும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் ஆதரவால் அனைத்து வேலைகளும் எளிதாக நிறைவேறும். சிறந்த வாகன வசதியும் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் திகழும் உங்களுக்கு துணிவுடன் செயல்பட ஊக்கம் பெறுவீர்கள்.

பெண்மணிகள்: நோய்களினால் சிரமப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பூசல் விலகும். உடன் பிறந்தவர்க்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். பணியாட்கள் அமைவதால் பணிச்சுமை குறையும்.

மாணவ மணிகள்: செயல்திறன் அதிகரிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு தேடிவரும். அதேசமயம் படிப்பில் கவனம் சிதறும். சோம்பலைத் தவிர்த்து கடின உழைப்பு தேவை.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலாளர்களால் வளர்ச்சி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதால் தனலாபம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விஸ்தரிப்பார்கள்.

அரசியல்வாதிகள்: உயர்பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்துங்கள்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் பரிந்துரையால் பரிசு, பாராட்டுதல்கள் பெறுவீர்கள். சில சலுகைகளை பெறுவீர்கள். புத்திசாலித்தனம் மேலோங்குவதால் உயரதிகாரிகளுக்கு உதவியாளராக செயல்பட முடியும். அதிக வருமானமும் கிடைக்கும்.

பெண்மணிகள்: வீட்டிற்குத் தேவையான பொருட்கள் நிரம்பி வழியும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் கிடைக்கும். இளம்பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.

மாணவ மணிகள்: படிப்பிலும், போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள் உறுதுணைளயாக இருப்பார்கள். பெற்றோர் நலன் கவனிக்க வேண்டும்.

சிறுதொழில் வியாபாரம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். சாமர்த்தியத்துடன் செயல்பட்டு சாதித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள்: தங்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் கிடைக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். தன்நிலை மாறாமல் நற்பெயரை காப்பாற்றிக்கொள்ளவும். காயங்கள் ஏற்படாதவாறு பணியாற்றவும். சிலருக்கு வாழ்க்கைத் தரம் உயரலாம்.

பெண்மணிகள்: இளம் பெண்கள் எவரிடமும் நெருங்கிப்  பழக வேண்டாம். முகப்பொலிவும், உத்தம குணங்களும் ஏற்படும். பழைய சம்பவங்களை மறந்து சகஜமாகப் பழகுவது நல்லது.

மாணவ மணிகள்: மதிப்புமிக்க பொருள்களை பாதுகாக்கவும். சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். பாடங்களில் விருப்பம் ஏற்பட்டு, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களிடம்  எச்சரிக்கையாக இருக்கவும். உழைப்பு வீணாகலாம் என்றாலும், முயற்சிக்கு நஷ்டம் ஏற்படாது. சில சினேகிதர்களை விலக்கவும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவு தற்போது கிடைக்காது. பகை தவிர்க்கவும். பேராசையை விடுவது நன்மை தரும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பலராலும் பரிசும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சிலர் சாதனை புரிந்து புகழ் பெறுவார்கள்.

பெண்மணிகள்: பொன்னாபரங்கள் கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறன் உருவாகும். ஆரோக்கியம் மேன்படும். குடும்பத்தில் தன விருத்தியும், நிம்மதியும் ஏற்படும்.

மாணவ மணிகள்: வாக்கு வன்மை அதிகரிப்பதால் பாராட்டு கிடைக்கும். சிலரால் பணம் இழப்பு ஏற்படலாம் என்பதால் சிலரைவிட்டு விலகிச் செல்லவும்.

சிறுதொழில், வியாபாரம்: கெளரவப் பதவி கிடைக்கும். நினைத்ததை நடத்திக் காட்டுவீர்கள். புதியவர்களால் நன்மை உண்டு.

அரசியல்வாதிகள்: மரியாதை அந்தஸ்து, பதவி ஆகியவை தேடிவரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: நிறுவனத்தில் புதிய செளகரியங்கள் கிடைக்கும். சாதித்துக் காட்டி, பாராட்டுகள், பரிசுகள் பெறுவீர்கள். பொருளாதாரம் உயரும். உயர்பதவியும் கிடைக்கும். மகிழ்ச்சியும் கோலாகலமும் ஏற்படும்.

பெண்மணிகள்: குண நலன்களாலும், செயல் திறனாலும் குடும்பத்தில் நற்பெயர் கிடைக்கும். பரிசு பொருட்கள் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் உற்சாகம் அதிகரிக்கும்.

மாணவ மணிகள்: செய்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர், பெற்றோர் ஆதரவால் உயர்க்கல்வி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லலாம்.

சிறுதொழில், வியாபாரம்: தனலாபம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புகழ் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அனைவரிடமும் அன்புடன் பழகவும்.

அரசியல்வாதிகள்: வாக்கு சாதுர்யத்துடன் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: இடமாற்றத்தால் கிடைக்கும் புதிய நண்பர்களால் நன்மை உண்டு. கெளரவமான நிலை அமையும். உபரி வருமானமும் கிடைக்கும். அன்றைய பணிகளை தள்ளிப்போட வேண்டாம்.

பெண்மணிகள்: பொன், பொருள் சேரும். வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் கிடைக்கும். வாசனை திரவியங்கள் கிடைக்கும். சந்ததி விருத்தி உண்டு. சுப நிகழ்ச்சிகளில் பிரதானமாக திகழ்வீர்கள்.

மாணவ மணிகள்: படிப்பில் திறமையும் மதிப்பெண்ணும் கிடைக்கும். நண்பர்கள் வழியில் உல்லாசப் பயணம் ஏற்படும். எதிர்பாலின ஈர்ப்பு நன்மை தராது.

சிறுதொழில், வியாபாரம்: நெடுநாளைய சங்கடம் நீங்கும். பல வழிகளிலும் பணம் சேரும். அரசு ஆதாயம் உண்டு. அதிருஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களாலும், பொதுமக்களாலும் ஆதரிக்கப்படுவீர்கள். விழாக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.