வயதான பசுக்கள் வாழ்ந்திருக்க

வயதான பசுக்கள் வாழ்ந்திருக்க

ரூ. 34 கோடியில் 34 கேந்திரங்கள்!

காராஷ்டிர மாநில பாஜக அரசு 34 கிராமப்புற மாவட்டங்களில் 34 ‘கோ வர்தன் கோவம்ச ரக்ஷா கேந்திர’ங்களை அமைக்கிறது. பால் மரத்த பசுக்களை வைத்துக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட இந்த கேந்திரம் ஒவ்வொன்றிற்கும்patnavis தேவேந்திர பட்நவீஸ் அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கும். வயதான பசுக்களை கசாப்புக்கடைக்கு அனுப்புவதைத் தடுப்பதால் பயோ கேஸ், தொழு உரம் உள்ளிட்ட பலன்களும் பெறலாம் என்பது அரசின் கணக்கு. ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த பாஜக அரசு பசுவதையை தடைசெய்தது. அதை திரும்பப் பெறுவது பற்றிய பேச்சே கிடையாது என்கிறது அரசு. மாநிலத்திலுள்ள நான்கு விவசாயப் பல்கலைக் கழகங்களில் இயற்கை வேளாண்மை, பயிற்சி / ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.