வங்கிகளில் வேலை செய்வது மதவிரோதமாம்!

தாருல் உலூம் தேவ்பந்த் என்ற முஸ்லிம் அமைப்பு தம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வங்கிகளில் வேலை செய்வதற்கு ஃபத்வா (தடை) விதித்திருக்கிறது. முஸ்லிம்கள் வங்கியில் வேலை செய்யக்கூடாது, அதேபோல வங்கிகளில் வேலை செய்பவருக்கு பெண் கொடுக்கக்கூடாது. காரணம் என்னவாம்? வங்கிகள் சேமிப்புத் தொகைகளுக்கு வட்டி கொடுக்கிறார்கள், கடனுக்கு வட்டி பெறுகிறார்கள். இவை தம் மதக் கோட்பாடுகளுக்கு விரோதமாம். நல்ல அறிவுரைதான் போங்கள். (இவர்கள் இதுவும் சொல்வார்கள், நாளைக்கு முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய்விட்டது என்றும் சொல்வார்கள்).

(இன் குலாப், சியாசத் இதழ்களிலிருந்து)

 

 

குரான் பிரதிகளை வினியோகிக்கத் தடை

சுமார் நான்கு மாதங்கள் ஜெர்மனியில் உண்மை பக்கங்கள் மதம் (கூணூதஞு ணீச்ஞ்ஞுண் ணூஞுடூடிஞ்டிணிண) என்ற அமைப்பினர் பயங்கரவாதிகளை (ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில்) திட்டமிட்ட ரீதியில் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. உளவுத் துறை தெரிவித்த தகவல்படி இதனால் தம் நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் தோன்றலாம் என்பதை உணர்ந்த ஜெர்மனி ‘உண்மை பக்கங்கள்’ அமைப்பினைத் தடைசெய்தது. தடைக்குப் பின், 190க்கும் அதிகமான இடங்களில் காவல் துறையினர் சோதனை செய்து, பலரை கைது செய்தனர். அந்த அமைப்பினர் குரானை அச்சடித்து இலவசமாக வினியோகித்து வந்தனர். இதன் மூலம் அவர்கள் மேலும் பல இளைஞர்களை ஈர்த்தனர். உண்மை பக்கங்கள் தலைவர் இப்ராஹிம் அபு ராஜி  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே, இப்ராஹிம் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். முற்போக்கு முத்திரையைக் குத்திக் கொண்ட ஜெர்மனி, மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகளை கூட்டம் கூட்டமாக உள்ளே வரவிட்டு  தலைவலியை விலைகொடுத்து வாங்கிவிட்டு இன்று முழித்துக் கொண்டிருக்கிறது. (காலம்கடந்த ஞானம்)

(இடேமாட் இதழிலிருந்து)

 

தொழுகை கூட்டங்களில் அரசியல் பேசாதே

சௌதி அரேபிய மன்னராட்சி அரசு, மசூதிகளின் தொழுகைக் கூட்டங்களில் இமாம்கள் (மத குருமார்கள்) மத சம்பந்தமான பிரசங்கங்களை மட்டுமே நிகழ்த்த வேண்டும், அரசியல் பேசுவதை அறவே நிறுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. பல இமாம்கள் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய அறிஞர் அப்துல்லா அஸிஜ் பின், அப்துல்லா ஷேக் போன்ற ஒரு சிலர் அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள் (ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள், நம் பாரத அரசு இதைப்போன்ற கட்டளை பிறப்பித்து நடைமுறைப்படுத்தினால், பல இமாம்கள் வீட்டிற்குப் போக வேண்டியதுதான்).

   (அக்பார் மஷ்ரிக் இதழிலிருந்து)