ராணுவத்தின் கண்ணியம் காப்போம்

குஞ்சன் சக்சேனா என்ற திரைப்படம் ஒன்று நெட்பிளிக்ஸில் ஆகஸ்ட் 12 அன்று வெளியிடப்பட்டது. இது கார்கில் போரில் பங்கு பெற்ற இந்திய முதல் பெண் விமானியின் கதை. அந்த படத்தில் இந்திய விமானப்படையைப் பற்றி சில தவறான, எதிர்மறையான கருத்துகள் வெளியாகியுள்ளன என நம் இந்திய விமானப்படை தணிக்கை குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு, சுஷாந்த் கொலை வழக்கு, “கான்”களின் அரசியல், தாதாக்கள் ஆதிக்கம், கருப்பு பணம் என அல்லல் படுகிறது பாலிவுட். இந்நிலையில் இந்தப்பட தயாரிப்பாளரான கரன்ஜோஹர் போன்றோர் நம் தேசிய கலாசாரத்தையும், பாரத ராணுவத்தையும் இழிவுபடுத்தாமல் படம் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.