யாரை ஏமாற்ற இந்த பந்த்

விவசாய மசோதாக்களை எதிர்த்து, எதிர்கட்சிகள் இணைந்து இன்று ‘பாரத் பந்த்’ அறிவித்துள்ளன. இந்த பந்தில் ஈடுபட்டுள்ள கட்சிகள், தொழிற்சங்கங்கள் எவை, தேசத்தின் நலனுக்கு அவர்கள் என்ன செய்தார்கள், தேசத்திற்கெதிராக என்னென்ன செய்தார்கள், அவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் எவை என்பது போன்ற அவர்களின் முந்தைய சரித்திரத்தை மக்கள் சற்று புரட்டிப் பார்த்தாலே போதும். இவர்களின் உண்மைத்தன்மை விளங்கிவிடும் முழு அடைப்பில்.

இதனால், இந்த ஈடுபட்டுள்ள கட்சிகளுக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது பற்றுள்ளதா என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக மக்கள் அறியலாம். மத்திய அரசு எந்த சட்டத்தை கொண்டுவந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டும். பொய்களை பரப்பி மக்களை தூண்டிவிட வேண்டும். இதனால் தேசத்தின் அமைதியை, வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் இதில் ஒருங்கிணைந்துள்ளன.

ஜல்லிகட்டு போராட்டத்தில், திராவிட கட்சிகள், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் எல்லாம் ஊடுருவிய பிறகு, அந்தப் போராட்டம் எப்படி திசை மாறியது என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். சி.ஏ.ஏ போராட்டம் என்ற பெயரில், டெல்லியில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வன்முறைகளை உலகறியும்.

பஞ்சாப் அரசின் மறைமுக ஆதரவில், விவசாயிகள் எனும் பெயரில் கமிஷன் ஏஜெண்ட்டுகள் நடத்தும் இந்த போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதற்கு சில வெளிநாடுகளின் ஆதரவும் உள்ளதை  உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளது.

இப்படிப்பட்ட பின்னணி கொண்ட போராட்டத்திற்குதான், தி.மு.கவும் அதன் தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே இவற்றின் உள்நோக்கம் என்னவென்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.