தெய்வீக தமிழக சங்கம்

தெய்வீக தமிழக சங்கம் சார்பாக நடைபெற்ற ‘தேசம்காப்போம் தமிழகம் காப்போம்’ என்ற ஆன்மீக தேச ஒற்றுமைக்கான நிகழ்ச்சி, ஹிந்துக்களின் உணர்வுகளை கூர்மையாக்கும் விதமாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு புத்தகம் திருநெல்வேலியில் கிராமங்கள் தோறும் வினியோகிக்கப்பட்டன.
மேலப்பாளையம் நகர், குறிச்சி பகுதி யில் புத்தகம் விநியோகிக்கும் போது அங்கு
சென்றவர்களை, இஸ்லாமிய அடிப்படை வாதிகள், சமூக விரோதிகள் தெருவிளக்குகளை அனைத்து மிரட்ட முயன்றனர். அப்பொழுதும் தேசபக்தர்கள் தைரியமாகவும் துணிச்சலாக ஹிந்து வீடுகளுக்கு சென்று புத்தகங்களை கொடுத்து அது குறித்து விளக்கினர்.

மேலப்பாளையத்தில் வாழும் ஹிந்துக்கள் சிறிய பாகிஸ்தானில் வசிப்பதை போல ஒரு பயந்த மனநிலையில் உள்ளனர். அதை தவிடுபொடியாக்கும் வகையில் இந்த தெய்வீக தமிழக சங்கத்தின் புத்தகம் வழங்கப்பட்டது. இது அவர்களுக்கு ஒருவித புரிதலை ஏற்படுத்தி உள்ளது. மனதைரியத்தை அளிப்பதாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இனி நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்கிற ரீதியில் மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
நாம் சென்ற இடங்களில் சிலர், எங்கே இவ்வளவு நாளாக இருந்தீர்கள், உங்களைத் தானே தேடி வருகிறோம் என்ற அவர்கள், தங்கள் பகுதி வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அங்கு நடக்கக்கூடிய தேச விரோத செயல்களையும் விளக்கினர்.  நாங்கள் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் இருந்தது. இனி அந்த பயம் இல்லை என கூறினர்.

 எஸ். இசக்கி
அமைப்பாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத்.