முன்னுதாரணம்

ஒருமுறை கல்கத்தாவில்  பெரிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அந்த ஊரில் முக்கிய நபரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற அட்வகேட்   கலந்துகொள்ள வந்திருந்தார்.  இயல்பாகவே அவர் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பதினைந்து நிமிடம்  முன்னதாகவே  சென்றிருப்பார். இந்த நிகழ்ச்சிக்கும் அப்படி முன்னதாகவே சென்றார். நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் வெளியே நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். அரங்கம் இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை. யார் சுத்தம் செய்வார்கள் என்று கேள்வியுடன் நின்று கொண்டிருந்தனர். உடனே ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அரங்கத்தின் உள்ளே சென்று குப்பைகளை எடுக்கத் தொடங்கினார். இது கண்ட அனைவரும்  தாமாக முன்வந்து அரங்கத்தை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கப்பட்டது. நாடாக இருந்தாலும் சரி தனிநபராக இருந்தாலும் சரி தாமாக முன்வந்து வேலை செய்ய வேண்டும்.