முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக் குறைவால் காலமானார்

இந்தியாவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சென்ற நரேந்திர மோடி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்த வழக்கறிஞர் அருண் ஜேட்லி இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மாணவப் பருவத்திலிருந்தே அகில பாரத வித்தியார்த்தி பரிசத் மூலமாக டெல்லியின் பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெட்லி பின்னாளில் பிரபல வழக்கறிஞராக பணிபுரிந்தார். 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட பாஜகவின் முதல் அமைச்சரவையில் வாஜ்பாய் தலைமையில் அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து 2014 நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். நீதி மற்றும் நிதித்துறையில் அமைச்சராக பணியாற்றிய இவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். சென்ற மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததை தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து அருண் ஜெட்லி இன்று காலை 12.30 மணி அளவில் காலமானார். அவரது இறப்பு நாட்டிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகுந்த பேரிழப்பாகும். அவரது நினைவை அவரது சேவையை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.