உலக சாம்பியன் பி.வி.சிந்து – முதல் இந்திய வீராங்கனை

 உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார். முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன்வசப்படுத்தினார்.

மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018), 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார்.

சாதனையை சமன் செய்த சிந்து: ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் 5 முறை பதக்கம் வென்றிருந்த சீன வீராங்கனை ஸாங் நிங்கின் சாதனையையும் இந்த போட்டியில் சமன் செய்தார் சிந்து.

சிந்துவின் இறுதிச் சுற்று பயணம்

காலிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை சீன தைபேயின் டை ஸþவை 12-21, 23-21, 21-19 என போராடி வென்றார். அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக நுழைந்தார்.

ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர்: உலக சாம்பியன் போட்டியில் சிந்து தங்கம் வென்றது தலைமுறை கடந்து ஊக்கம் தரும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி பதிவிட்டுள்ளதாவது: திறமை வாய்ந்த சிந்து, மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். உலக பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். பாட்மிண்டனில் அவரது அர்ப்பணிப்பு, நாட்டம் அளப்பரியது. சிந்துவின் வெற்றி தலைமுûயைக் கடந்து ஊக்கம் தரும் என்றார்.

நரேந்திர மோடி, பிரதமர்: அற்புதமாக ஆட்டம், முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுகள், இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்.

சச்சின், முன்னாள் கிரிக்கெட் வீரர்: வியக்கத்தக்க சாதனை புரிந்ததின் மூலம் அனைத்து இந்தியர்களையும் கெளரவப்படுத்தியுள்ளார் சிந்து. சாம்பியன்களை உருவாக்க அரசு தொடர்ந்து ஊக்கம், ஆதரவு தரும்.

கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர்: வாழ்த்துகள். திறமை, உடல்தகுதி, மனவலிமையுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து.

சாய்னா, பாட்மிண்டன் வீராங்கனை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ், ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோரும் சிந்துவை பாராட்டியுள்ளனர்.