முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்குது ஆபத்து – பாகம் 1

பிரபல பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி , தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 2, 2020 தினசரியில் Tablighi Jamaat – its other, evil side என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று தொடங்கி மூன்று நாட்களாக வெளிவரும்.

(தமிழில்: வேம்படியான்).

 

நிஜாமுதீன் , தில்லி மாநாடு ஏற்படுத்திய கொரானா தொற்று காரணமாகவே தப்லிக் ஜமாத் (த ஜ ) என்ற பெயரை நம்மில் பலர் முதல் முறையாக கேட்டிருப்போம். ஆனால், தேச பாதுகாப்பு, புலனாய்வுத் துறை காவல் துறை மூத்தவர்களும் வல்லுநர்களும் 2001 ல் இருந்து இந்த அமைப்பை, அதன் நோக்கங்களை செயல்களைக் கவனித்து வருகின்றனர்.

பயங்கரவாதத்தின் நாற்றங்கால்- நுழைவாயில்

தப்லிக் ஜமாத் (த ஜ ) என்பது அரசு சாரா இஸ்லாமிய வன்முறை அமைப்பு. பல சந்தர்ப்பங்களில் இது இஸ்லாமிய பயங்கரவாதிகளை பயிற்றுவிப்பதற்கான நர்சரியாக செயல்பட்டுள்ளது ”என்று பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஃபர்ஹான் ஜாஹித் எழுதுகிறார். ‘தப்லிகி ஜமாத் மற்றும் பயங்கரவாதத்துடனான அதன் தொடர்புகள்’ என்ற தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையில், ‘ த ஜ பயங்கரவாதத்திற்கு ஆட்சேர்ப்பு பணியினையும் ஆதரவு திரட்டும் வேலைகளையும் செய்து வருகிறது. த ஜவின் அங்கத்தினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். பல பயங்கர வாத குழுக்களை ஒருங்கிணைக்கும் செயல்களிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். ஆகவே பயங்கரவாதத்திற்கான நுழைவாயில்” என்று பல்வேறு குறிப்புகளை மேற்கோள் காட்டி, டாக்டர் ஃபர்ஹான் எழுதுகிறார்

 

 

அமெரிக்க – ஐரோப்பாவில் பயங்கரவாத செயல்கள்

டிரான்ஸ்-அட்லாண்டிக் விமான குண்டுவெடிப்புக்கு முயன்ற ஷூ குண்டுவீச்சு ரிச்சர்ட் ரீட் [2001]
நியூயார்க் நகரில் அழுக்கு வெடிகுண்டு (Dirty bomb) என்கிற கதிர் வீச்சு வஸ்துக்களையும் – ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பயங்கரவாத ஆயுதங்களையும் இணைத்து நிகழ்த்தப் படும் தாக்குதலை முயற்சித்த ஜோஸ் பாடிலா [2002],
பார்சிலோனா பயங்கரவாத சதி [2008]
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலிபான் ஜான் வாக்கர் கைது [2001].

  • Dr. FarhanZahid

போன்ற நாசகாரச் செயல்களில் தஜ வின் தொடர்பு இருக்கிறது என்பது டாக்டர் ஃபர்ஹானின் தீர்க்கமான முடிவு.
ஜனவரி 8, 2016ல் “தப்லிகி ஜமாத்: ஜிஹாத்தின் திருட்டுத்தனமான படைகள் ”என்ற ஆய்வுக் கட்டுரையில் 80 சதவீத இஸ்லாமிய தீவிரவாதிகள் தப்லிகி அணிகளில் இருந்து வந்தவர்கள்” , என்று அலெக்ஸ் அலெக்ஸிவ் எழுதுகிறார்,
அமெரிக்க ரெட்டைக் கோபுர தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட ஜாக்கிரியா மௌஸ்ஸாவ் தொடங்கி, கிரீஸ் நாட்டின் பார்ஸலோனா மசூதி மீது குண்டு வீச தீட்டப்பட்ட சதித் திட்டத்திற்காக கைது செய்யப் பட்டவர்கள், 2005ல் 52 பேர்கள் இறக்க காரணமாக இருந்த லண்டன் மெட்ரோ ரயில் நிலையங்களில் நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்புகளில் கைதானவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலை தந்து த ஜவின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறார்.கிரேக் ஸ்மித் என்ற பாதுகாப்பு வல்லுநர். மைக்கேல் ஹைம்பாக், உதவி எஃப்.பி.ஐ இயக்குனர் [யு.எஸ்] , “ த ஜ அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க வலுவைக் கொண்டுள்ளது, அல்கொய்தாவின் பணிகளை செய்து வருகிறது என்று கூறுகிறார். [நியூயார்க் போஸ்ட் டிசம்பர் 27, 2015].

( பாகம் 2ல் நம் அண்டை நாடுகளில் தப்லிக் ஜமாத் நிகழ்த்தும் கொடூரங்களைப் பார்ப்போம்)