மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 6

உஷத் காலத்திலேயே எழுந்து சிவன் பாட்டுப்பாடி மார்கழி நோன்பு நோற்கும் வண்ணம் தோழியர் பலரும் ஆஜராகி விட்டனர்.
“நானே எழுப்புவேன்…” என்று முந்தைய தினம் உறுதியாகக் கூறிய வார்த்தைகளை மறந்து தோழி ஒருத்தி தன்னிலை மறந்து தூங்கி விடுகிறாள். கண் வளர்ந்த அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்பும் நிலைக்கு மற்றவர்கள் தள்ளப்பட்டநிலை.

“ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகித் தலைகுனிய நேரிடும்” என்ற நீதிபோதனையை “மானே நீ நென்னலை…” எனத் தொடங்கும் இப்பாடல் உணர்த்துகிறது.

சதாசிவனைத் தனக்காக மட்டுமின்றி பிறர் நலனுக்காகவும் வணங்க வேண்டும்; தவிர வெற்று வார்த்தைகளை நேரத்திற்கேற்றாற் போல உதிர்ப்பதைவிட ஆக்கபூர்வமான செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆளுமைச் செய்தியையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது.

ஆர்.கே.