திருப்பாவை – பாசுரம் 6

“கண்ணன் மீதான அன்பை ஒருவர் மற்றும் பெற்றால் போதாது. அது மற்றவர்க்கும் சேருமாறு சென்று சேவை செய்தால்தான் நாம் உண்மையான பக்தியுடையவர் ஆவோம். ”
அந்தத் தத்துவத்தில் இங்கே உறக்கத்திலிருந்து துயில் எழுப்பும் தன்மை நிகழ்கிறது.

பூதனையின் முலையில் தடவிக் கிடந்த நஞ்சை, அவள் ஆவியுடன் சேர்த்து உண்டவனும், வஞ்சகம் கொண்டு வண்டியின் சகடச் சக்கரமாக வந்த அசுரன் மாயும்படி தன் திருவடி வித்தையைக் காட்டியவனும்,
பாற்கடலில் திருஅனந்தாழ்வான் மீது கண்வளரும் வித்தகனும், உலகத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணமானவனும் திருமாலே.

இத்தகைய தன்மைகள் பொருந்திய பெருமானைத் தமது உள்ளத்தில் இருத்தியபடி தியானித்திருக்கும் முனிபுங்கவர்கள் போன்றோர் உள்ளத்தில் எம்பெருமானும் எழுந்தருள்கிறான்.
அவர்களும் மெல்ல எழுந்து, ஹரி ஹரி என நாமம் பாடிப் பேரரவம் எழுப்புகின்றனர. இப்
பேரோசை நம் உள்ளத்திலும் புகுந்து நம் உள்ளத்தைக் குளிர்விக்கக் கண்ணனைப் ப்ரார்த்திப்போம்.

ஆர்.கே.