மற்றொரு கிறிஸ்தவ நிதிமோசடி

தெலுங்கானாவில் உள்ள ‘கிறிஸ்தவ சுவிசேஷ அமைப்பு, ஆப்பரேஷன் மொபைலிஷேஷன் இந்தியா குரூப் ஆப் சேரிட்டீஸ், ஆபரேஷன் மெர்சி இந்தியா அறக்கட்டளை, டிக்னிட்டி பிரீடம் நெட்வொர்க், குட்ஷெப்பர்ட் பள்ளிகள், அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் போன்ற பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் தலைவராக உள்ள ஜோசப் டிசோசா, அவரது மகன் ஜோஷ் டிசோசா மீது, ஆல்பர்ட் லெயல் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்துள்ளார். அதனை விசாரித்த புலனாய்வுத்துறை, மேற்கண்ட நிறுவனங்கள் வாயிலாக அவர்கள் செய்த ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு நிதி முறைகேடுகளை கண்டறிந்துள்ளது. உடனடியாக அந்த அமைப்பின் 26 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.