மறக்கக் கூடாத சில விஷயங்கள்

சுதந்திர போராட்ட காலங்களில் இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கிய வந்தேமாதரம்  பாடல் எவ்வளவு முக்கியமானது என்பது சோனியாவுக்குத் தெரியாது.   என கோஷமிட்டதற்காக தடியடி வாங்கியவர்களும், குண்டடிப்பட்டு இறந்தவர்களும்  லட்சக்கணக்கானவர்கள்.  அப்படிப்பட்ட வந்தேமாதரம் பாடலை பாட மாட்டோம் என கூறும்முஸ்லிம்களை அருகில் வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். மீது வசைமாரி பொழிய  சோனியாவுக்கு எந்த தகுதியும் கிடையாது.

சோனியா காந்தி நேருவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.  இன்றைய பல பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நேரு. இன்று வரை வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம், தீவிரவாத தலைவர்கள் என காஷ்மீர் பள்ளத்தாக்கு புகைவதற்கு நேருவே முதன்மையான காரணம். இன்று காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து இருப்பதற்கு முன்னின்று செயலாற்றியவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்பதை மறந்துவிடக் கூடாது.  1947 அக்டோபர் மாதம் ஸ்ரீநகரில் நடந்த கூட்டத்தில்  ஷேக் அப்துல்லாவின் பேச்சின் மூலம், அவரது நோக்கத்தை புரிந்து கொண்ட காஷ்மீர் மாநில ஆர்.எஸ்எஸ். பிரச்சாரக் பால்ராஜ் மதோக்கின் முயற்சியின் காரணமாகவும் சங்கத்தின் தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் முயற்சியின் காரணமாகவும் இந்தியாவுடன் இணைய மகாராஜா ஹரிசிங்கின் சம்மதமும் கையொப்பமும் கிடைத்தது.  இவர்களுடன் கேதர்நாத் சஹானியின் செயல்பாடும் முக்கியமானதாகும்.  ஸ்ரீநகர் விமான நிலையத்தை, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், இந்திய ராணுவம் வரும் வரை பாகிஸ்தானி காட்டுமிராண்டிகளிடமிருந்து பாதுகாத்தார்கள் என்பதையும் சோனியா அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அரசியல் சாஸனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர்,  அரசியல் சாஸன முகவுரையில் மதச்சார்பின்மை என்பதை குறிப்பிடவில்லை.  இந்திரா காந்தி முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக  தனது ஆட்சிக் காலத்தில், அரசியல் சாஸன முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை இணைத்தார். இதையும் சோனியா தெரிந்து கொள்ள வேண்டும்.

சோனியா காந்திக்கு சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டும்.  ஒன்று, இன்று அவர்களுடன் ஒட்டி உறவாடும் தி.மு.க. சுதந்திர போராட்ட காலத்தில் யாருக்கு வெண்சாமரம் வீசினார்கள் என்பதை  கனிமொழியிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.  ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை கொடுத்தாலும், தமிழ்நாடு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என கேடுகெட்ட தனமாகப் பேசிய தி.மு.க.  இவர்களுடன் இருப்பதால்தான் சோனியா சிந்தனையில் இவ்வளவு குழப்பம்!