மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு; பல்கலைக்கு நோட்டீஸ்

பணி நியமனங்களில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பல்கலையான ஜாமியா மிலியா இஸ்லாமியா புதுடில்லியில் அமைந்துள்ளது. இங்கு, ஆசிரியர் அல்லாத 241 பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.இதில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து, எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த ராம் நிவாஸ் சிங், எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த சஞ்சய் குமார் மீனா ஆகியோர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த தடையும் இல்லை.அதே நேரத்தில், மனுதாரர்கள் விண்ணப்பித்துள்ள பதவிக்கான பணியிடங்களில், இரண்டு பிரிவுக்கும் தலா ஒரு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.வழக்கின் விசாரணை, ஜூலை 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.