மஃபியா தலைவனை புகழும் கும்பல்

பாட்னா சந்திப்பில் அமைந்துள்ள ஜமா மசூதிக்கு வெளியே ஜும்மா நமாஸ் (வெள்ளிக்கிழமை தொழுகை) செய்த பிறகு, ஒரு குழு “அத்திக் அகமது அமர் ரஹே, ஷாஹித் அதிக் அஹ்மத்” (அதிக் அகமது என்றென்றும் வாழ வேண்டும், ‘தியாகி’ அத்திக் அகமது’ என்று முழக்கங்கள் எழுப்பியது. மேலும், மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச யோகி அரசுக்கு எதிராகவும் அந்த கும்பல் முழக்கங்களை எழுப்பியது. அந்த கும்பல் கொல்லப்பட்ட மாஃபியா தலைவன் அத்திக் அகமதுவை “தியாகி” என்றும் “ஹீரோ” என்று அழைத்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு காணொளியில், முஸ்லிம் கும்பலை வழிநடத்தும்  ரயீஸ் கவ்சாவி என்ற நபர், அத்திக் அகமது முழு முஸ்லீம் சமூகத்திற்கும் ஒரு ‘தியாகி’ என்று ஊடகங்களிடம் பேசினார். ரம்ஜான் மாதத்தில் அத்திக் அகமதுவை படுகொலை செய்ய மாநில நிர்வாகமும் காவல்துறையும் குற்றவாளிகளுடன் ஒத்துழைப்பதாக குற்றம் சாட்டினார். இது போன்ற கும்பல்கள் தான், பயங்கரவாதிகளான யாகூப், அப்சல், முக்தார் உள்ளிட்டோரையும் முன்னர் புகழ்ந்து பாராட்டியது நினைவு கூரத்தக்கது. 3வது வார்டு தெற்கு மலாக்காவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ராஜ்குமார் சிங் என்ற ரஜ்ஜு பையா, கொல்லப்பட்ட மாஃபியா தலைவனுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தான் அத்திக் அகமதுவை கொன்றார், எனவே அவர் பதவி விலக வேண்டும், அத்திக் அகமதுவின் உடல் மீது தேசியக் கொடியில் போர்த்தப்பட்டிருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், அத்திக் அகமதுவின் கல்லறையில் தேசியக்கொடியை போர்த்தினார். இதையடுத்து பிரயாக்ராஜ் காவல்துறையினர், ராஜ்குமார் சிங்கை கைது செய்தனர். இதற்கிடையில், பா.ஜ.கவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, மாஃபியா தலைவன் அத்திக் அகமதுவை புகழ்ந்ததற்காக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மேலும் பல இடங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, நாங்கள் அவரை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியதுடன் அது அவரது தனிப்பட்ட கருத்து அதனை கட்சி ஏற்காது என்று கூறி பின்வாங்கியது.