பொதுமக்களே எதிர்க்கட்சியிடம் கேள்வி கேளுங்கள்

மோடி  அரசு இந்தியாவின் பன்முகத்தன்மையை அமைதியை சீர்குலைக்கிறது , மோடியை கேள்வி கேளுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பேசியுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சிக்கு  பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பத்தாண்டு கால ஆட்சின் அவலங்கள் இன்றை க்கும் வழக்குகளாகவும் அதற்காக  பிணையில் பல காங்கிரஸ்   தலைவர்கள் வெளியில் உள்ளார்கள் . மண்ணில் ஊழல் விண்ணில் ஊழல் பஞ்சபூதத்திலும்  ஊழல் அனைத்திலும் ஊழல் என்று ஊழல்மயமாகவே பத்தாண்டுகளை கடந்து ,நாட்டின் வளங்களை கொள்ளையடித்து சொத்து சேர்த்த இந்த புண்ணியவான்கள்தான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்ற நல்லாட்சியை குறை சொல்லுகின்றனர் .

நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் ,ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் அரசு நிலங்களை சோனியா வின் மருமகனுக்கு குறைந்த விலையில் விற்று அவன் அதனை பலகோடிகளுக்கு கைமாற்றி கொடுத்ததில் ஊழல் , காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தனது குடும்ப அங்கத்தினர் பங்கேற்கும் யங்  இந்தியா  அறக்கட்டளைக்கு மாற்றியதில் சுமார் 1500 கோடி ஊழல் . ஹிமாச்சல பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு இடம் ஒதுக்கியத்தில் ஊழல் , மகாராஷ்டிரத்தில் ஆதர்ஷ் கட்டுமானத்தில் ஊழல் சிதம்பரத்தின்  மகன் கார்த்தியின் பலகோடி ஊழல் ஆம்புலன்ஸ் இயக்கத்தில் ஊழல் இப்படி நாளொரு ஊழல் பொழுதொரு வழக்கு என்று இந்தியாவின்மானத்தை  உலக அரங்கில் கேவலப்படுத்திய காங்கிரஸ் கும்பலின் கொள்ளைக்கூட்டத்தின்  தலைவனாக இருந்து கொண்டு பிணையில் வெளியே வந்த ராகுல்காந்தி எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத நரேந்திர மோடியின் நல்லாட்சியை பார்த்து கேள்வி கேளுங்கள் என்கிறார் எதற்கு நாட்டின் மானம் போய்விட்டதாம்.

அம்மாவும் மகனுமான பதாண்டுகாலம் ஒரு பினாமியை பிரதமராக வைத்து கொண்டு அவர்களின் ஏவலாளி போன்று நடந்துக்கொண்ட   மன்மோகன் சிங்  போன்று வாய்பேசாது எதையும் காணாது எதனையும் கேட்காது இருக்கும் காந்தி பொம்மை போல் ஆட்சி செய்வார்கள் என்று அவர் எண்ணி இருந்தால் அதற்கு பா ஜ க எப்படி பொறுப்பாகும்? அதிகாரமளித்த   மக்களிடம் என்னென்ன செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததோ அதனை தற்போது செய்து வருகின்றது பா  ஜ க . சொல்லாத எதையையாவது பா ஜ க செய்ததா? . மக்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது தேர்தல் அறிக்கையாக சொன்னவற்றை நாட்டை சரிசெய்ய ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அது மக்கள் அவர்களுக்கு அளித்த உரிமை. ஒரேயொரு சட்டத்தால் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒரே நேரத்தில் கதற விட்ட ஒருநபரின் ஆட்சியானது எதிர்கால இந்தியர்களுக்கானது.

சுதந்திர இந்தியா நமது நாட்டினர்  அனைவருக்குமே சொந்தமானது அதற்காக அனைத்து நாட்டினருக்குமானது என்பது அல்ல. நாங்கள் தனி இனம் எங்களால் இந்துக்களோடு ஒன்றிணைத்து வசிப்பது இயலாத காரியம் என்று சொல்லி நமது நாட்டை வெட்டி பிளந்து பாகிஸ்தானாகவும் பங்களாதேசமாகவும் பிரித்து சென்ற பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு நமது நாட்டில்  எதற்காக குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை ஒவ்வொரு இந்தியனும் நமது எதிர்க்கட்சி தலைவர்களிடம்  குறிப்பாக ராகுல் காந்தியிடம் கேட்கவேண்டும்.உனது கொள்ளு தாத்தாவும் பாட்டியும் அப்பனும் தங்களது சுய நலனுக்காக செய்த தவறுகளை தற்போது திருத்தி வருகிறோம் அதுவரை கொஞ்சம் அமைதியாக இரும் பிள்ளாய்  என்று அவரிடம் மக்கள் சொல்லவேண்டும் . இல்லையேல் திமுக செயல்தலைவர் சுடலையைப்போல் தினம் தினம் அறிக்கை கொடுத்து தனது இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளும் வினோத நோய் பிடித்தலையும் இந்த நபர்களை திருத்தவே முடியாது.

பல ஆண்டுகாலமாய் தொடர்ந்து நேரு குடும்பத்து வாரிசுகளையே தேர்தெடுத்துவந்த அமேதி தொகுதி வாக்காளர்களே இவர்களை நிராகரித்த பின்னரும் கேரளாவிலே வயநாட்டில்  வந்து வாய்ப்புபெற்ற நபர்கள் எல்லாம் வாய்கிழிய வம்பு பேசுவது வியப்பளிக்கிறது . தேர்தல்களிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவுக்கு தொற்று போனபின்ன்பும் எதற்கு இந்த வார்த்தை ஜாலம் என்பதுதான் புரிய வில்லை தானும் புரியாது அடுத்தவனையும் புரிய விடாது செய்யும் கோமாளித்தனமும் மக்கள் மெச்சும் வகையில் இல்லை என்பதனை யாராவது  சொல்லுங்கள் இல்லையேல் காந்தியின் கனவான  காங்கிரஸ்ஸை கலைப்பது என்பது  நனவாகிவிடும் என்பதுதான்  தற்போதைய அரசியல் நிலவரம்.