பூஜைக்கான விளக்குகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டுமா?

பூஜைக்கான  விளக்குகளை  தினசரி  சுத்தம்  செய்ய  வேண்டுமா?

– மலர்விழி தங்கராஜ், திருமங்கலம்

நாம் தினசரி குளிப்பது போல பூஜை சாமான்களையும் தினசரி சுத்தம் செய்வது அவசியமானது. விளக்கு என்பது மெழுகுவர்த்தி போன்று ஒரு வெளிச்சத்திற்கான சமாச்சாரம் இல்லை. அது மங்களகரமானது. விளக்கு எரிகிறது என்றால் அங்கே அக்னி பகவான் அமர்ந்திருக்கிறார் என்று பொருள்.

* கடன்  தொல்லைகளிலிருந்து  விடுபட  எந்த  தெய்வத்தை  வழிபடுவது?

vilakku

– வி. செல்லதுரை, சாத்தான்குளம்

சாமியைக் கும்பிட்டால் மட்டும் போதாது; இரவு பகலாக் கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பு பலன் தரும்படி நமது இஷ்ட தெய்வத்தை வணங்கினாலே போதும்.

இரவில் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வர என்ன வழி?

– ஆர். முரளி, நெல்லூர்

களைப்பு இருந்தால் கட்டாந்தரையிலும் தூக்கம் வரும். இல்லையெனில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது. தினசரி காலை அல்லது மாலை 45  நிமிடம் நடைபயிற்சி செல்லுங்கள். படுக்கப்போகும் முன் நெற்றியில் விபூதி பூசி, சாமி கும்பிட்டு படுக்கச் செல்லுங்கள்.

பான் (கஅ‡) கார்டு என்றால் என்ன?

 

– கே. பஞ்சாபகேசன், உடையார்கோயில்

பான் என்பது கஞுணூட்ச்ணஞுணணா அஞிஞிணிதணணா ‡தட்ஞஞுணூ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது நிரந்தர கணக்கு எண். இந்தக் கார்டை வருமான வரித்துறை வழங்குகிறது. யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். ஆதார் அட்டையும் உடனே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அத்தனைக்கும் இதுதான் ஆதாரம் இப்போது.

பரதனாரே… அப்பா திரைப்படம் பற்றி?

– சுபாஷினி ராமு, தாம்பரம்

பெற்றோர்களும் பிள்ளைகளும், சேர்ந்து அவசியம் பாருங்கள். ‘குழந்தைகளை வளர்க்காதீர்கள்… உயர்த்துங்கள்’ என்ற செய்தியை அற்புதமாகச் சொல்கிறார் இயக்குநர் சமுத்திரகனி.

 

67 வயதான அதிமுக எம்.பி அன்வர் ராஜா 35 வயதுப் பெண்ணை 3வது திருமணம் செய்துள்ளது பற்றி?

– சி. பாரதிராஜா, தேனி

இஸ்லாமில் இதெல்லாம் சகஜம் – மதசார்பற்ற நாடு என்று பெயர். ஆனால் மதத்துக்கு ஒரு சட்டம். அதனால்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

* நாய் வாலை நிமிர்த்த முடியாதது ஏன்?

 

இதற்கு பதில் சொன்னா அடுத்த வாரம் குதிரைக்கு ஏன் கொம்பு இல்லை என்று கூட கேட்பீர்கள். இது தவறு என்று தெரிந்த பிறகு கூட, நமது தவறான பழக்க வழக்கங்களையே நம்மால் சரி செய்ய முடியாதபோது  நாய் வாலை நிமிர்த்துவது பற்றி ஏன் சார் கவலைப்படணும்!

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.