பூங்கா விற்பனைக்கு

பாகிஸ்தான் கடும் நிதி நெருக் கடியில் சிக்கியுள்ளது உலகறிந்த ரகசியம். இந்நிலையில் சமீபத்தில் புதிய கடன் கிடையாது, பழைய கடன் உடனே அடைக்கப்பட வேண்டும் என சௌதி கூறிவிட்டது. மலேஷியாவோ கடனை அடைத்துவிட்டு உன் விமானத்தை எடு என பாகிஸ்தானின் விமானத்தை சிறைபிடித்து விட்டது. தற்போது பாகிஸ்தானில் 759 ஏக்கரில் உள்ள எப் 9 பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்க அந்த நாடு முடிவெடுத்துள்ளது. முகமது அலி ஜின்னாவின் சகோதரி பாத்திமா ஜின்னாவின் பெயரில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிலைமை இப்படியே தொடர்ந்தால் சில காலத்தில் மொத்த பாகிஸ்தானுமே விற்பனைக்கு வந்துவிடும் என அந்த நாட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.