பிரிட்டனில் 3 இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள்

லண்டன் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக பிரீத்திபடேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவியேற்றார். தனது அமைச்சரவையை அவர் நேற்று அறிவித்துள்ளார்.பல்வேறு நாடுகள் மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் மூன்று இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

  • பிரீத்தி படேல் – மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரீத்தி படேல் 47 நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிஷி சுஷாங்க் – கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுஷாங்க் 39 கருவூலத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அலோக் சர்மா – இந்தியாவில் பிறந்தவரான அலோக் சர்மா 51 சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.