பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.23 லட்சம் வீடுகளைக் கட்ட மத் திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் வசிக்கும் அனை வருக்கும் 2022-க்குள் சொந்த வீடு கிடைப்பதை உறுதி செய் வதற்காக, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை (நகரம்) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரூ.4,988 கோடி செலவில் 1.23 லட்சம் வீடுகள் கட்டுவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையிலான, மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு (சிஎஸ்எம்சி) ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தகவல் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்..

இதன்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 27,746 வீடு களும், தமிழ்நாட்டில் 26,709 வீடு களும் கட்டிக் கொடுக்கப்படும். மேலும் குஜராத் (20,903), பஞ்சாப் (10,332), சத்தீஸ்கர் (10,079), ஜார்க்கண்ட் (8,674), மத்திய பிரதேசம் (8,314), கர்நாடகா (5,021), ராஜஸ்தான் (2,822), உத்தரா கண்ட் (2,501) ஆகிய மாநிலங் களிலும் வீடு கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

இந்த ஒப்புதலுடன் இதுவரை நகரங்களில் மட்டும் 90 லட்சத் துக்கும் அதிகமான வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கிராமங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் 2022-க்குள் மொத்தம் 2 கோடி வீடுகளும், இதில் நகரங்களில் மட்டும் 1.12 கோடி வீடுகளும் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.