பிபின் ராவத் மிகச்சிறந்த தேசபக்தர்

கடந்த வருடம் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில்பாரதத்தின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.பிபின் ராவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டு பேசுகையில்,”2017ல் பூட்டானின்டோக்லாம் (எல்லையில் சீனாவுடன் நமக்கு கடுமையான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில், என் வீட்டில் இரவு நேரத்தில் ஜெனரல் பிபின் ராவத் ஆலோசனை கூட்டங்களை நடத்துவார்.நாங்கள் அனைவரும் ஆலோசனைகளை மேற்கொள்வோம்.அப்போது அவர், நாம் உறுதியாக உள்ளோம் நாம் ஒரு அடிகூட பின்வாங்கப்போவதில்லை.நாம் அங்கு நிலைகொண்டு சீன படைகளை பின்வாங்க செய்வோம் என்று பிபின் ராவத் கூறினார்.75 நாட்களுக்கு பின் சீன படைகள் பின்வாங்கின. பிபின் ராவத் மிகவும் நெஞ்சுரம் மிக்கவர்.முடிவெடிப்பதில் ஒருபோதும் அவர் தயக்கமும் காட்டியதில்லை.மிகச்சிறந்த தேசபக்தர், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், சிரந்த போர் யுக்திகளை சிந்திக்கக்கூடிய நபரை, சிறந்த ஜெனரலை, சிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது.மக்கள் மிகவும் அன்பு வைத்திருந்த ஹிரோவை நாடு இழந்துவிட்டது.அவரது இழப்பு நம் அனைவருக்குமான தனிப்பட்ட இழப்பு” என்றார்.