பாரத விமானப்படை

பாரதத்தின் பாதுகாப்பு படையில் முக்கிய பங்கு வகிக்கும் விமானப்படை 1932-ல் இதே தினத்தில் நான்கு வெஸ்ட்லேண்ட் லாபிடி விமானங்கள், ஐந்து விமானிகளுடன் துவங்கப்பட்டது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத விமானப்படை தொடங்கப்பட்ட சமயத்தில், இங்கிலாந்தின் ராயல் விமானப்படையின் ஒரு அங்கமாகவே செயல்பட்டு வந்தது. பாரதத்தின் விடுதலைக்கு பிறகு, விமானப்படை பாரதத்தின் பாதுகாப்புப் படையின் ஒரு தனி பிரிவாக உருவானது. தற்போது விமானப்படையில் சுமார் 1,70,000 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

சில காலங்களுக்கு முன் நடந்த பாரத அமெரிக்க கூட்டு விமானப்படை பயிற்சியில் ‘பாரத ராணுவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, எந்த சூழ்நிலையையும் உடனுக்குடன் புரிந்துகொண்டு அதற்கேற்ப எதிர் நடவடிக்கை எடுப்பதில் தேர்ந்தவர்கள் இவர்கள்.

உலகின் எந்த மிக சிறந்த விமானப்படையும், இவர்களை அவ்வளவு எளிதில் வெற்றிகொள்ள முடியாது’ என அமெரிக்க விமானபடை தளபதி கூறியிருந்தார். உலகின் நான்காவது பெரிய விமானப்படையான நம் பாரத விமானப்படையில், தற்போது பாரதத்தின் சொந்த தயாரிப்பான தேஜஸ் உட்பட, சுகோய், ரபேல், அப்பாச்சி என பல நவீன போர் விமானங்கள் உள்ளன.

அதில் பயன்படுத்த ஏதுவாக பிரம்மோஸ், அஸ்திரா, டெர்பி என பல நவீன ஏவுகணைகளும் உள்ளன. இவை அனைத்தையும் விட, இவற்றை திறமையாக கையாளும் நமது விமானப்படை வீரர்களின் தேசப்பற்றுதான். உலகின் மிகசிறந்த விமானப்படையாக திகழ காரணமாகிறது.

பாரத விமானப்படை தினம் இன்று.