பாரத சாதனையாளருக்கு ஐநா விருது

விவசாய கழிவுகளில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்தார் பாரதத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி வித்யுத் மோகன். அவரை ஐ.நா சபை 2020ம் ஆண்டின் உலக இளம் சாதனையாளர் பட்டியலில் தேர்வு செய்துள்ளது. இவரது நிறுவனமான ‘தகாச்சர்’ 4500 விவசாயிகளிடம் இருந்து ஆண்டுக்கு 3000 டன் விவசாய கழிவு பொருட்களை பெறுகிறது. அவற்றில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.