`பாரத்மாதா கி ஜே’ குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

கோவையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, பில்கிஸ் பானு வழக்கில் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே எனக்கூறி வரவேற்றனர். இது தான் ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே என்றால் ஒருபோதும் தமிழகம் அதை ஏற்றுக்கொள்ளாது. 4 பேராக பிறந்து ஒரு குரங்கை, வேடனை சகோதரனாக ஏற்றுக் கொண்டதாக கம்பராமாயணம் மதநல்லிணக்கம் பேசுகிறது. ஆனால் பாஜகவினர் சொல்வது, சீ இடியட்ஸ் என்பன உள்ளிட்ட கருத்துகளை பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இண்டியா கூட்டணியில் உறுப்பினராகவும், வம்சாவளிகளால் நடத்தப்படும் திமுக என்னும் கட்சி 2 விஷயங்களை முன்வைத்தே ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்று சனாதன தர்மத்தை வெறுக்கும் எஜமானர்களை சமாதானப்படுத்த வேண்டும். மற்றொன்று அளவுக்கு மீறி கொள்ளையடிக்க வேண்டும். 2ஜி குற்றவாளி ஆ.ராசா, சனாதன தர்மத்தை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறார். தற்போது மேலும் ஒரு படி சென்று ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி ஜே சொல்லும் ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பொய்யான கோட்பாட்டை கூறியுள்ளார். போதை பொருள் மாஃபியாவின் உறைவிடமாக இருக்கும் திமுகவின் தலைவர்களுக்கே சீ இடியட்ஸ் என்பது பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை நந்தனத்தில் தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2 வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இதில்எதையுமே முதல்வர் செய்யாமல் பாஜக அரசியல் செய்கிறது என்றுசொல்வது நியாயமா, பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டும். இதில், நாங்கள் அரசியல் செய்யவில்லை. 2018-ம் ஆண்டு செல்வப்பெருந்தகை காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்தார். அப்படிப்பட்ட ஒருவரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமித்துள்ளார்கள். அவர் வன்கொடுமையை பற்றி பேசுவதில் எந்தஆச்சரியமும் இல்லை. வேங்கைவயல் சம்பவம் குறித்து செல்வப்பெருந்தகை இதுவரை வாய் திறக்கவில்லை. அவர்முதலில் தமிழகத்தை பார்க்கவேண்டும். ஆனால் பிரதமராகநரேந்திர மோடி வந்த பின்னர்பட்டியலினத்தவரையும், பழங்குடிஇனத்தை சேர்ந்தவரையும் குடியரசுத் தலைவராக அமர வைத்துள்ளார். இவ்வாறு கூறினார்.