பாரதியார் மறைந்த தினம்

சுதேசிக் கப்பல் ஓட்டிய தேசபக்தர் வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைப்பட்டு கிடந்தார்.  ஒருமுறை பாரதியார் அரசின் உத்தரவு பெற்று அவரைப் பார்க்கச் சென்றார் போகும் பொழுது ஒரு கூடை நிறைய உதிரிப் பூக்களை வாங்கிக் கொண்டு சென்றார். வ.உ.சியை கண்டதும் அந்தக் கூடை பூவையும் அவர் மீது தூவினார். இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பெருகியது. வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள் எனினும், எட்டயபுரத்திலே இருக்கும் பொழுது பாரதியாருக்கும் வ.உ.சிக்கும் நெருங்கிய நட்பு கிடையாது. சூரத் காங்கிரஸ் மாநாட்டின் போதுதான் இருவருக்கும் நல்ல நட்பு உண்டானது. இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள்.
‘‘பாரதியாரின் நினைவு தினம் இன்று’’