பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்களை தனிநாடாக மாற்ற முயலும் பங்களாதேஷ்

பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரியும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான கர்னல் அப்துல் ஹக், பங்களாதேஷ் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பாரதத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள 7 மாநிலங்களும், 7 சுதந்திர நாடாக மாறவேண்டும் என கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து, பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், பங்களாதேஷ் நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகள், பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்கள், பாரத நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க வேண்டும்என வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்றன. இதற்கு பின்னால், பாகிஸ்தானின் சதி வலை உள்ளது.

டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, முன்னாள் ஜமாத்-−இ-−இஸ்லாமி தலைவர் குலாம் ஆசாமின் மகனும், பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) அப்துல்லாஹ்ல் அமன் ஆஸ்மி பாரதத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில், பாரதம்துண்டு துண்டாக உடைந்து போகாத வரை பங்களாதேஷ் முழு அமைதியை காணாது என்ற விஷமத்தனமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

பாரதமும், பங்களாதேஷூம் உறவுகளை மீட்டெடுக்க முயற்சிக்கும் நேரத்தில் அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன. பங்களாதேஷ் நாட்டில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வரும் அமன் ஆஸ்மி, பாரதத்தை விமர்சிக்கவும், பிராந்திய புவிசார் அரசியல் குறித்து பாரதத்திற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருபவர். இவருக்கு பின்னாலிருந்து இயக்குபவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆகும்.

பங்களாதேஷ் நாட்டில், பாரதத்தை பற்றிய முரண்பட்ட கருத்துகளை உருவாக்குவதில் ஜமாத்-−இ-−இஸ்லாமி முன்னிலை வகிக்கிறது. வடகிழக்கு பாரதத்தில் உள்ள மக்கள்பாரதத்திலிருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறார்கள் என்றும், அவர்களால் பங்களாதேஷ் நாட்டிற்கு உதவமுடியவில்லை என்ற ஆதங்கம் இருப்பதாக ஒரு பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள்.

பாரதம் மற்றும் பங்களாதேஷ் இணைந்து சிட்டகாங்கில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும், நிலை நாட்ட முயலும் முயற்சியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஜமாத்-−இ-−இஸ்லாமி செயல்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பங்களாதேஷ் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கிறது.

பாரதத்திற்கு எதிராக உருவாகியுள்ள பாகிஸ்தான் – அமெரிக்கா கூட்டு முயற்சிக்குபாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டுடன் மூலோபாய ரீதியாக இணைந்திருக்கும் சூழ்நிலையை பங்களாதேஷ் உருவாக்க முயலுகிறது.

அதேநேரத்தில் அமெரிக்காவும், தனது கால்தடத்தை அதிகரித்து போட்டியிடும் பெரும் வல்லரசு நலன்களுக்கான மையப் புள்ளியாக பங்களாதேஷைமாற்றுகிறது.இதன் மூலம்,பாரதத்திற்கு அச்சத்தை அதிகம் உருவாக்க முயலுகிறது.

பாரதத்தின் பிராந்திய ஆதிக்கத்தை பலவீனப்படுத்த பாகிஸ்தான் பழைய உறவுகளை மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது என்பது அறிவார்ந்த அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.