பாஜக நூலகத்தில் ‘கற்க கசடு அற’!

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 5 பிப்ரவரி அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நூலகத்தில் சுமார் 2,000 புத்தகங்களும், 100 வார மற்றும் மாத இதழ்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஜன சங்கம், பா.ஜ.க. குறித்த கட்சியின் வெளியீடுகள், இவ்விரு அமைப்புகள் குறித்த, பிறர் எழுதிய புத்தகங்கள், பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகங்கள் என சமுதாய அரசியல் சார்ந்த பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல், இணையத்தின் மூலம் நூல்களை (Digital Library) படிக்கவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 200 நூல்கள் இந்த இணைய வழி நூலகத்தில் பதிவேற்றம் செயப்பட்டுள்ளது.

இதன் அடுத்தகட்டமாக, இத்தகைய நூலகங்களை பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகங்களிலும் அதன் பிறகு, மாவட்ட அலுவலகங்களிலும் நிறுவ, அனைத்து ஏற்பாடுகளும் செயப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. குறித்த பல்வேறு ஆவணங்கள், புகைப்படங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த அனுபவங்களின் தொகுப்பு ஆகியவற்றைக் bjp-libravoryகாலப்போக்கில் அழித்துவிட முடியாத வகையில் பாதுகாக்கும் முயற்சியாக ஆவணங்கள் காப்பகத்துறை தனது செயல்பாட்டையும் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், குறிப்பாக 60 வயதிற்கு மேல் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் இத்தகைய ஆவணங்கள் இருந்தால், அவற்றைப் பெற்று, டிஜிட்டல் முறையில் மின்னுருவம் கொடுக்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

நூலகத்தை தொடங்கி வைத்த அமீத் ஷா, தொன்மை வாந்த பாரதத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள, புத்தகங்கள் துணை புரிகின்றன. இந்தப் புத்தகங்களைப் பேணிக் காப்பது நமது நாட்டின் சமுதாய மற்றும் வரலாற்றுப் பின்புலத்தைப் பேணிக் காப்பதற்கு ஒப்பாகும். பாரதத்தின் வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், அதன் பிறகு உருவாகிய பாரதீய ஜனதா கட்சி இவற்றின் பங்களிப்பு, மகத்துவம் வாந்தது. இவ்வரலாற்றை, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நூலகம் ஒன்றை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நிறுவ எண்ணிய எனது எண்ணம் இன்று நிறைவேறி உள்ளது.”

‘கற்க, கசடு அற, கற்பவை; கற்றபின் – நிற்க, அதற்குத் தக‘ என்ற குறளின் ஆங்கில மொழியாக்கம் கொண்ட பதாகை நூலகச் சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது.