கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

பைபிள் விஞ்ஞான ரீதியானதல்ல, பயனற்றது. தேவகுமாரன் அவதாரம், மனித குமாரனாக பிறந்தது கற்பனை. பைபிள் கூற்றுப்படி 3 கோடி செவ்விந்தியர்களையும் ஆஸ்திரேலிய பழங்குடியினினர்களையும் கொலை செய்தனர், திருச்சிலுவை யுத்த கொடூரங்கள், பெண்களை துயரப்பட செய்தது ஏன்? வயதானவர்களை கொலை செய்தது ஏன்? இது போன்ற பல சரித்திர உண்மைகளை ஆதாரத்துடன் அறியச் செய்துள்ளார் ஆசிரியர். தங்கள் கிறித்துவ சமயமே சரியானது என்று விவாதிப்பவர்cristion-historyகளுக்கு தகுந்த பதில் கூறிட இப்புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன.

பிஷப் கால்டுவெல், பாதிரி போப், பாதிரி ஹீராஸ் போன்ற அந்நிய மதகுருமார்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்ற போர்வையில் உலக வரலாறுகளை கிறித்துவ சமயத்தை பரப்புவதற்கும் அவர்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக மறைத்தும் மாற்றியும் வளைத்தும் எழுதியுள்ளதை ஆதாரத்தோடு நிரூபிக்கிறது நூல்.

பிறநாட்டு வரலாற்றை திரிபுவாத கருத்துக்களுடன் எழுதிய அன்னிய – சமய – காலனிய – தங்களது கிறித்துவ சமயத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகளையும் பலநூறு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட கொடூரங்களையும் வேண்டுமென்றே எழுதத் தவிர்த்ததை விளக்குகிறார்.

தற்போது எழுதப்பட்டுள்ள இந்நூலின் மூலம் இவ்வெற்றிடம் நிரப்பப்பட்டு, மறைக்கப்பட்ட கிறித்துவ வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார் உமரி காசிவேலு.

புத்தகத்தின் பெயர் :           கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

நூலாசிரியர்           :           உமரி காசிவேலு

வெளியீடு   :           வர்ஷன் பிரசுரம்

சென்னை – 600 017.

போன்: 044-2436 1141, 2434 0599

உட்ச்டிடூ: டுச்ண்டிதிஞுடூததேூச்டணிணி.ஞிணிட்

விலை: ரூ. 350/- பக்கம்: 528