பாஜக – அதிமுக நெருங்கி வருகிறது என்கிறாரே கருணாநிதி?

சுவாமி  படங்களுக்கு  பிளாஸ்டிக்  மாலைகள்  அணிவிக்கலாமா?

– விசாலி கணேஷ், சென்னை

எது எதுக்கோ தினசரி செலவு செய்கிறோம். இதில் போய் ஏன் கஞ்சத்தனம்? நல்ல பூ மாலைகள் அணிவிப்பதே சிறந்தது. அதிலும் துலுக்கச் சாமந்தியை தவிர்க்கவும்.

 

 * தானத்தில்  சிறந்தது  எது?

. – டி.என்.ரங்கநாதன். திருவானைக்காவல்

தானத்தில் சிறந்தது அன்னதானமே… கல்வி தானம், ஆடைதானம், அரிசிதானம், பால் தானம், கோ தானம்  என  எது  செய்தாலும்  நல்லதே.

மக்கள்  நலக்  கூட்டணி   தொடர   வாய்ப்பு   இருக்கிறதா?modi-jayalalidha

– தே. மோகன்பாபு. விருதுநகர்

விரைவில் விஜயகாந்தும் வாசனும் வெளியே வருவார்கள். பிற கட்சிகளும் கூட பிரிந்துபோய் திமுக, அதிமுக என யாரோடாவது ஒட்டிக்கொள்ளும். விஜயகாந்த்  பாஜகவில்  மீண்டும்  சேர  வாய்ப்பு  உள்ளது.

பரதனாரே…  தாங்கள்  சமீபத்தில்  படித்த  நல்லதொரு  வாசகம்?                 

– கே. அச்சுதன், வயலூர்.

கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொருவரின் கையை நம்மோடு இணைத்துக் கொள்ளத்தான்.

இரவில் தயிர் சாப்பிடக் கூடாது என்பது ஏன்?

– சேமத்துரை, ஸ்ரீ வைகுண்டம்

தயிர் ஜீரணம் ஆக அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும். தயிர் மட்டுமல்ல கீரை,  நெல்லிக்காய்  கூட  இரவில்  கூடாது.

* இந்தியாவில்  முஸ்லிம்,  கிறிஸ்துவர்களுக்கு  இருப்பது  போன்ற  பாதுகாப்பும் சலுகைகளும்  முஸ்லிம்,  கிறிஸ்தவ  நாடுகளில்  ஹிந்துக்களுக்கு  உண்டா?  

– ர. விஜயகுமார், ஈரோடு

இல்லை – இல்லை – இல்லை.

முஸ்லிம் நாடுகளில் ஹிந்துக்களுக்கு எந்தவிதமான வழிபாட்டு உரிமையும் கிடையாது. ஏதோ ஒரு முஸ்லிம் நாட்டில் வேலைக்குச் சென்ற ஹிந்துக்கள் ஒரு வீட்டில் சேர்ந்து பஜனை பாடினார்கள் என்பதற்காக அவர்களை பிடித்து சிறையில் தள்ளிவிட்டாகள். இங்கேயெல்லாம் மைனாரிட்டிகள் செல்லப்பிள்ளைகள், அவர்களது நாட்டில் ஹிந்துக்கள் அடிமைகள் மட்டுமே.

பாஜக – அதிமுக  நெருங்கி  வருகிறது  என்கிறாரே  கருணாநிதி?

– கி. லட்சுமணன். திருச்சி

மத்திய அரசும் மாநில அரசும் நெருங்கி வருவதும் மட்டுமல்ல, இணைந்து செயல்படுவதே நல்லது. அரசியல் கருத்துவேறுபாடு ஆட்சியில்  வேண்டாமே!

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

One thought on “பாஜக – அதிமுக நெருங்கி வருகிறது என்கிறாரே கருணாநிதி?

  1. மத்திய அரசும் மாநில அரசும் நெருங்கி வருவதும் மட்டுமல்ல, இணைந்து செயல்படுவதே நல்லது.

Comments are closed.