விஜயபாரதம் ஆசிரியருக்கு ‘ஹிந்து தர்ம பிரசார சேவா ரத்னம்’ விருது!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர award-veerapaguவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும் ஜூன் 9 அன்று மாம்பலத்தில் ‘ஸ்ரீ ஜகத்குரு’ ஆன்மிக இதழ் நடத்திய விழாவில் பாஜகவின் கேரள மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், தேசிய வார இதழ் விஜயபாரதம் ஆசிரியர் ம. வீரபாகு ஆகியோருக்கு ‘ஹிந்து தர்ம பிரசார சேவா ரத்னம்’ விருது வழங்கி அருளாசி வழங்கினார்கள். தொடர்ந்து பாஜகவின் இல. கணேசன், ஹெச். ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். துவக்கத்தில் ஸ்ரீ ஜகத்குரு பத்திரிகையின் ஆசிரியர் ஆர். நாராயணன் வரவேற்புரை நிகழ்த்த நிர்வாக ஆசிரியர் டாக்டர் கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் அறிமுக உரை ஆற்றினார்கள்.  நிறைவாக ஸ்ரீ ஜகத்குரு இதழின் இணையாசிரியர் சி. கனகராஜன் நன்றி நவின்றார்.

தகவல்: கே. கிருஷ்ணகுமார், எஸ். சந்தோஷ்