பாகிஸ்தானில் ஹிந்து டி.எஸ்.பி

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்து மத பெண்ணான மனிஷா ரூபேட்டா, பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபத் என்று இடத்தை சேர்ந்தவர். இவர், காவல் துறையில் உயர் பதவிக்கான தேர்வை எழுதி தேர்வான 468 பேரில் 16வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதனையடுத்டு அவர் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரெண்டாக தேர்வாகி உள்ளார். தற்போது அவர் பயிற்சியில் உள்ளார். விரைவில் டி.எஸ்.பியாக பதவி ஏற்பார். பாகிஸ்தானில் ஹிந்து பெண் ஒருவர் டி.எஸ்.பி.யாக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து அவர் கூறுகையில், சின்ன வயதில் இருந்தே நானும் எனது சகோதரிகளும் டாக்டர் அல்லது ஆசிரியை ஆக வேண்டும் என்பதற்காக விடாமுயற்சியுடன் கடுமையாக படித்தோம். அவர்கள் டாக்டர்களாகி விட்டனர். எனக்கு மருத்துவ நுழைவு தேர்வில் ஒரு மார்க் குறைந்ததால் அதனை படிக்க முடியவில்லை. காவல்துறை மீது இருந்த ஆர்வத்தால் அதற்காக அரசு பணியாளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். பெண்களை பாதுகாக்கும் வகையில் நான் இந்த பணியில் சிறப்பாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.