பாகிஸ்தானில் கோயில் இடிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள காத்ரி மொஹல்லா, தேஹ் மிதியில் அமைந்துள்ள ஹிங்லாஜ் மாதா கோயிலை அங்குள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள் இடித்துத் தள்ளினர்.  இது அப்பகுதி ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் கடந்த 22 மாதங்களில் ஹிந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட 11வது தாக்குதல் இது.  இவ்விவகாரம் தொடர்பாக உள்ளூர் ஹிந்து அமைப்பினர் கண்டன பேரணிகள் நடத்தினர். பாகிஸ்தான் ஹிந்து கோயில் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணன் ஷர்மா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது ஊடகத்தினரிடம் பேசிய அவர், ‘முஸ்லிம் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் கண்டு பயப்படுவதில்லை’  என்று கூறினார். சிறுபான்மை சமூகங்களை பாதுகாப்பதாக பாகிஸ்தான் அரசு பலமுறை உறுதிமொழி அளித்தும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது. இதற்காக பலமுறை சர்வதேச சமூகத்தால் பாகிஸ்தான் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.