பள்ளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஸ்வச் வித்யாலயா புரஸ்கார் என்ற தூய்மை பள்ளி விருதுகளின் 2021 – 2022ம் ஆண்டுக்காக விருதுகளைப் பெற பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விருதுக்கு பள்ளிகள் வரும் மார்ச் மாதம் வரை விண்ணப்பிக்கலாம். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள்  என அனைத்தும் இந்த விருதை பெற தகுதியானவை. தண்ணீர், துப்புரவு, சோப்பு மூலம் கை கழுவுதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு, பழக்க மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கொரோனா தயார் நிலை என்ற 6 துணை பிரிவுகள் அடிப்படையில் ஆன்லைன் மற்றும் அலைப்பேசி செயலி மூலம் பள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன. இவற்றின் தரமதிப்பீடு தானியங்கி முறையில் உருவாக்கப்படும். ஐந்து நட்சத்திர தர மதிப்பீடு முறையில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். ஐந்து நட்சத்திர தர மதிப்பீடு முறையில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். ஒட்டுமொத்த பிரிவில், இந்த ஆண்டு விருதுக்கு, தேசிய அளவில், 40 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். பள்ளிகளுக்கான விருது தொகையும் ‘சமக்ரா சிக்‌ஷா’ திட்டத்தின் கீழ் தலா ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  முதல் முறையாக 6 துணைப் பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றுக்கான பரிசுத் தொகை பள்ளி ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம்.