திருப்பள்ளியெழுச்சி 10

பரந்த இப்பூவுலகில் வாழும் உயிர்களை சிவானந்த கடலில்  திளைக்கச் செய்து பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்தி, அப்பெருமான் உயிருக்குயிராய் நின்ற நிலையினை முந்தைய பாசுரத்தில் உணர்த்தினார் மணிவாசகர். திருப்பள்ளியெழுச்சியின் இந்த இறுதி பாசுரத்தில், இந்த உலகம், சிவபிரான் உலக உயிர்களை தனதருளால் எடுத்து ஆட்கொள்ளும் இடம் என மனிதர்கள் முதலில் அறிய வேண்டும். அவ்வாறு அறியாத  காரணத்தால் தான் “புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள் அவமே போக்குகின்றோம்” என்கின்றார். அமுதனாகிய சிவனே, “பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாட்களை போக்குகின்றோமோ என்று திருமாலும் நான்முகனும் வருந்துகின்றனர். பூமிதனில் பிறக்க விருப்பம் கொள்கின்றனர். ஆகையால், பரந்து விரிந்த உனது பெருங்கருணையுடன் இந்த உலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத  பேரமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!”, என்கிறார்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

விஜயபாரதத்தின் ஆசிரியர் குழு உறுப்பினரான ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ஆர்.கே ஒரு முன்னாள் வங்கி அதிகாரி. இவர் நமது விஜயபாரதத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், தன்னூக்க பயிற்சியாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பல பரிமாணங்களில் தேசப் பணியும் ஆன்மீகப்பணியும் செய்து வருகிறார்.