பலன் பெரும் விவசாயிகள்

விவசாயிகள் வாழ்வில் வளம் பெற, மத்திய அரசால் விவசாய மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டது. இதனால், இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் வர்த்தகம் செய்ய முடியும். தேவை உள்ள எந்த மாநிலத்திலும் தன் விவசாய விளை பொருட்களை விற்க முடியும் என்பது போன்ற பல்வேறு சாதகங்கள் உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு ஆதாயம். ஆனால் இன்றுவரை இதனால் ஆதாயம் அடைந்து வந்த இடைத்தரகர்கள், அவர்களை ஆதரிக்கும் எதிர்கட்சியினர்களுக்கு பலத்த இழப்பு. எனவே இவர்கள் விவசாய மசோதா குறித்து பல்வேறு பொய் தகவல்களை விவசாயிகளிடம் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில், மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜிஜேந்திர போஹி எனும் விவசாயிக்கு மூன்று நாட்களில் வழங்கப்பட வேண்டிய பணம் ரூ. 2,85,000த்தை இரண்டு வியாபாரிகள் நான்கு மாதமாக தரவில்லை. எனவே புதிய சட்டத்தின்படி அவர் தனக்கு நிலுவையில் உள்ள பணம் தர மீது அவர்கள் மீது வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் அவருக்கு அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட்டது. கேரளா வாசனை பொருட்கள் வாரியத்தில் ஏலக்காய் 50,000 கிலோ ஏலம் விடப்பட்டது. புதிய விதிமுறைகளின்படி வாங்கியவர்கள் 10 நாட்களில் பணத்தை செலுத்த வேண்டும். இது விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும். அசாம், திப்ருகரை சேர்ந்த விவசாயிகள், ஆக்ரா, கயா பகுதி விவசாயிகளும் இடைத்தரகர்கள் இல்லாததால் அவர்களுக்கு கூடுதல் வருவாய் வருகிறது. இதனால் தாங்கள் பாடுபட்டு விவசாயம் செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கிறது என தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலை இப்படி இருக்கையில் பல மக்கள் விரோத அமைப்புகளும் எதிர் கட்சிகளும், உண்மைக்கு மாறாக பேசி விவசாயிகளை குழப்பி வருகின்றன.