பத்வா குழப்பங்கள்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தாரூல் உலூம் தியோபந் எனும் முஸ்லிம் அமைப்பின் முல்லாக்கள் விடுத்துள்ள அறிவிப்பில், பத்வா அறிவிக்கப்படாதவரை, கொரோனா தடுப்பு மருந்தை முஸ்லிம்கள் போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ராஸா அகாடமி தன் அறிக்கையில், சீனாவின் தடுப்பு மருந்தில் பன்றி கொழுப்பினால் செய்யப்பட்ட ஜெலட்டின் உள்ளது. எனவே அதை பாரத அரசு இறக்குமதி செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, மொரோக்கோ, துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகள் இதற்கு பத்வா விதிக்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.