பத்திரிக்கையின் கோயபல்ஸ் வேலை

முகநூல் நிறுவனத்தின் இந்திய கொள்கை தலைவராக இருப்பவர் அங்கிதாஸ். இவரை குறிவைத்து சமீபத்தில் காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது. இவரது சகோதரி ஜே.என்.யு’வில் படிக்கும் காலத்தில் ஏ.பி.வி.பி அமைப்பு மற்றும் உலக மாணவர் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். ஆனால் பாரத அரசுக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை அங்கிதாஸ் அந்த பதவிகளில் இருந்தார் என புளுகி இருக்கிறது. இதை முறையாக ஆராயாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சார்பு ஊடகங்கள் என பலரும் இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு பரப்பி வருகின்றனர். பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும், மக்களும் நம்பிவிடுவார்கள் என்று 1940-களில் கோயபல்ஸ் சொன்ன தத்துவத்தை 2020-களிலும் நம்பும் இவர்களை கண்டால் சிரிப்புதான் வருகிறது.