பட்ஜெட் உங்கள் அலைபேசியில்

பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் எந்தவித இடையூறும் இல்லாமல் நேரடியாக தெரிந்துகொள்ள வசதியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். புதிய மொபைல் பட்ஜெட் செயலி, 14 யூனியன் பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக அணுக உதவுகிறது. இதில் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானியங்களுக்கான தேவை, நிதி மசோதா போன்றவை உள்ளன. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் உரை நிதியமைச்சரால் முழுமையாக வாசிக்கப்பட்டதும், மொபைல் செயலியில் பட்ஜெட் ஆவணங்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கிடைக்கும். மேலும் இந்த செயலியை யூனியன் பட்ஜெட் வலை தளமான www.indiabudget.gov.in என்ற வலைதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.