குடியரசு அணிவகுப்பு

* டில்லி குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக லடாக் யூனியன் பிரதேச அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. திக்ஸே பௌத்த மடத்தை சித்தரிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. லேபகுதிக்கு அருகிலுள்ள பாரத வானியல் ஆய்வகமும் இதில் இடம்பெறுகிறது.

* கிறிஸ்தவரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில், ஆந்திரத்தில் தற்போது ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஜெகன் விமர்சனத்துக்குள்ளானார். தன் பெயரை காத்துக்கொள்ள குடியரசு தின அணிவகுப்பில், ஆந்திரா சார்பாக அலங்கார ஊர்தியில் நந்தி, விநாயகர், நாக தேவதை, லேபக்க்ஷி கோயிலின் மாதிரிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.